வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஸ்கோடா கார்கள்ஆய்வு முடிவில் தகவல்

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aaசெக் குடியரசைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஸ்கோடா, பல புதிய மாடல்களிலான வாகனங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்கோடா தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதே அதற்கு சான்று. இந்தியாவிலும் ரேபிட், ஆக்டோவியா உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் திருப்திக்குரிய கார்கள் எவை? என்பது குறித்து ஜேடி பவர் என்ற நிறுவனம் ஜெர்மனியில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கு பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும், திருப்தியையும் பெற்ற கார் நிறுவனமாக தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேர்வாகியிருக்கிறது ஸ்கோடா ஆட்டோ லிமிடெட். இதனால், ஸ்கோடா நிர்வாகிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துள்ளனர். சுமார் 15,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நம்பிக்கைக்குரிய வாகனமாக எதைக் கருதுகிறீர்கள் என்ற கேள்வி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. கார்களை 5 செக்மெண்ட்களாகப் பிரித்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் சிறிய ரகம் மற்றும் நடுத்தர ரகத்தைச் சேர்ந்த கார்களில் ஸ்கோடா தயாரிப்புகள்தான் சிறந்தவை என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஸ்கோடா ஃபேபியா மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய மாடல்கள்தான் மக்கள் மனதைக் கொள்ளையடித்துள்ளன. அதில் சூப்பர்ப் மாடலானது, நடுத்தர ரக கார்களில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன் இன்டீரியரில் உள்ள விலாசமான இட வசதி, சாலை லேன் அஸிஸ்டன்ஸ் சிஸ்டம், டிராஃபிக் ஜாம் அஸிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை ஜெர்மனி மக்களை வெகுவாகக் கவர்ந்த அம்சமாக விளங்குகிறது. சிறிய ரக கார்களில் பெஸ்ட் ஒன்னாகத் தேர்வான ஸ்கோடா ஃபேபியாவில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். செல்போன், ஐ-பேட் என ஸ்மார்ட் டிவைஸ் எதுவாக இருந்தாலும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் அதை இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி தங்களை பெரிதும் ஈர்த்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெரிதும் பெற்றுள்ள ஸ்கோடா நிறுவனம், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிறந்த சேவைகளை தொடர்ந்து வழங்கும் என நம்பலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply