வலது கை டிரைவ் வசதி கொண்ட ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி உற்பத்தி துவக்கம்

Loading...

%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%88-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9fஹோண்டா நிறுவனம், ஆர்ஹெச்டி அல்லது ரைட் ஹேன்ட் டிரைவ் எனப்படும் வலது கை டிரைவ் வசதி கொண்ட ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்காரின் உற்பத்தி துவக்கியது. மாறுபட்ட சந்தைகளின் தேவைகளுக்காக, பல்வேறு கார்கள், ஆர்ஹெச்டி அல்லது ரைட் ஹேன்ட் டிரைவ் எனப்படும் வலது கை டிரைவ் மற்றும் எல்ஹெச்டி அல்லது லெஃப்ட் ஹேன்ட் டிரைவ் எனப்படும் இடது கை டிரைவ் வசதிகளுடன் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இது ஜப்பானை சேர்ந்த ஹோண்ட நிறுவனம் தங்களின் ஹோண்டா என்எஸ்எக்ஸ் சூப்பர்காரை இடது கை டிரைவ் வசதியுடன் மட்டுமே வழங்கி வந்தனர். தற்போது தான், வலது கை டிரைவ் வசதியுடைய கார்களின் உற்பத்தியை துவக்கியுள்ளனர். ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி உற்பத்தி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
உற்பத்தி;
வலது கை டிரைவ் வசதி உடைய ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார்கள், அமெரிக்காவின் ஓஹியோ-வில் உள்ள மேரிஸ்வில் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள ஹோண்டாவின் பெர்ஃபார்மன்ஸ் உற்பத்த்சி மையத்தில் (Performance Manufacturing Centre) உற்பத்தி செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் வலது கை டிரைவ் வசதி உடைய ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்காரின் புக்கிங் ஏற்றுகொள்ளப்பட்ட காரணத்தால், இதன் உற்பத்தி துவங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்;
வலது கை டிரைவ் வசதி உடைய ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார் அறிமுகம் செய்யப்படுவதனால், இதை இந்தியா போன்ற பல்வேறு புதிய வாகன சந்தைகளிலும் அறிமுகம் செய்ய முடியும். ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார், இந்தியாவில் ஃபிளாக்ஷிப் தயாரிப்பாகவும் அறிமுகம் செய்யப்படுகிறது.
இஞ்ஜின்;
ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார், 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் உடைய 3.5 லிட்டர், வி6, ட்வின்-டர்போ இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 572.62 பிஹெச்பியையும், 646 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்காரின் இஞ்ஜின், 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செயல்திறன்;
ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
உற்பத்தி முறை;
இந்த ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார் கையால் உருவாக்கப்படுகிறது. ஒரு நாளில் 6 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு காரை அசெம்பிள் செய்ய சுமார் 6 மணி நேரம் வரை ஆகிறது. அதன் பின்னர், ஒவ்வொரு காரும் சுமார் 200 கிலோமீட்டர் வரை பரிசோதிக்கப்படுகிறது.
அறிமுகம்;
கையால் செய்யப்படும் முதல் ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஆர்ஹெச்டி சூப்பர்கார், 2017 துவக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply