வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு தீர்வு தரும் வாழைக்காய்

Loading...

%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3வாழைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. பல்வேறு சத்துக்கள் வாழைக்காயில் அடங்கியுள்ளது. வாயுத்தொல்லை, வயிற்றில் புண் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. வாழைக்காய் சிறிதளவு சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். 90 நிமிட உடற்பயிற்சிக்கு பிறகு தேவைப்படுகிற ஆற்றலை வாழைக்காயை சாப்பிடுவதன் மூலம் பெற்று விடமுடியும். வாழைக்காய் இரத்தச் சோகையை விரட்டக் கூடியது. அது மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க வாழைக்காயை சாப்பிடலாம்.

வைட்டமின் சி – 8.7மி.கி., வைட்டமின் இ – 0.10மி.கி, வைட்டமின் கே – 0.5 மைக்ரோகிராம், வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.

கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply