வயர் இணைப்பு கோளாறு 4 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது ஃபியட்

Loading...

%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-4-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9aஃபியட் நிறுவனத்துக்கு இது போதாத காலம்தான் போலிருக்கிறது. புதிது புதிதாக பல சர்ச்சைகளுக்கும், வம்புகளுக்கும் நடுவே சிக்கித் தவிக்கிறது அந்நிறுவனம். விற்பனை எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாக ஃபியட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது அடுத்த தலைவலியை ஏற்படுத்தும் பிரச்னை அந்நிறுவனத்துக்கு வந்துள்ளது. ஃபியட் தயாரித்த கார்களின் எலக்ட்ரானிக் வயர் இணைப்புகளில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் எஞ்சின் செயலிழக்க நேர்வதாகவும் புகார் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 4,10,000 கார்களைத் திரும்பப் பெற ஃபியட் திட்டமிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் பிரச்னைக்கு உள்ளான 3,23,000 கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. கடந்த ஆண்டு அறிமுகமான கிரிஸ்லெர் 200 செடான், ரேம் புரோ மாஸ்டர் சிட்டி வேன்ஸ், ஜீப் ரெனகேட், செரோக்கி எஸ்யூவி உள்ளிட்ட பல மாடல்களில் வயர் இணைப்பு பிரச்னை ஏற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபியட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளையில், இந்தப் பிரச்னையால் எந்தவிதமான விபத்தோ, எவருக்கும் காயமோ, உயிரிழப்போ நேரவில்லை என்று ஃபியட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வயர் இணைப்பு பிரச்னை ஏற்படும்போது எஞ்சினை நிறுத்தி விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்தாலே அது சரியாகி விடும் என்றும் அந்நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. எது, எப்படியோ வாடிக்கையாளர்களின் அதிருப்தி சம்பாதித்துக் கொண்ட ஃபியட், அதற்கு பிராய்ச்சித்தமாக வயர் இணைப்பு பிரச்னைகளைச் சரி செய்யக் கூடிய மென்பொருளை மேம்படுத்தி வருகிறது. அதன் மூலம் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்னைக்கு உள்ளான வாகனங்களை வைத்துள்ளவர்கள், அருகில் உள்ள சர்வீஸ் சென்டர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயர் இணைப்பை மாற்றியமைத்து, மென்பொருள் அப்டேட் செய்வதற்காக ஃபியட் சர்வீஸ் சென்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான ஃபியட்டின் செயல்பாடுகள் சமீப காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்களிடம் இழந்த நம்பிக்கையை அந்நிறுவனம் மீண்டும் எட்டிப் பிடிக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply