லைப் ஃபோன்களும் வெடிக்கின்றதாம்

Loading...

%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதைதொடர்ந்து, இந்த விடயத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக லைப் போன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply