லிமிடெட் எடிசனாக வருகிறது ஸ்கோடா ஆக்டாவியா பிளாக்

Loading...

%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4வாடிக்கையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள ஸ்கோடா நிறுவனம், அடுத்த ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் 4 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று பிரத்யேகமான கருப்பு வண்ண ஆக்டாவியா. லிமிடெட் எடிசனாக வரும் இந்த காருக்கு இப்போதே டிமாண்ட் உருவாகியுள்ளது. ஸ்கோடா அறிமுகப்படுத்திய ஸ்டேண்டர்டு மாடல் ஆக்டாவியாவுக்கு மார்க்கெட்டில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததன் விளைவுதான் இந்த புதிய கருப்பு வண்ண மாடல். அதேவேளையில், தற்போது உள்ள ஆக்டாவியாவைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்கள், வடிவமைப்பு வித்தியாசம் ஆகியவற்றுடன் புதிய மாடல் களமிறங்கவுள்ளது. வெளிப்புறத்தில் உள்ள பம்பர் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்குகளும் பிளாக் ஷோடோவில் அமைந்துள்ளன. இண்டீரியரை எடுத்துக் கொண்டால், டார்க் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் டிரைவிங் மோட் ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பதுதான். அதற்கு ஏதுவாக டைனமிக் சேசிஸ் கண்ட்ரோல் (டிசிசி) வசதி ஆக்டாவியா பிளாக்கில் உள்ளது. ஈகோ, கம்ஃபர்ட், நார்மல், ஸ்போர்ட், இண்டிவீஜுவல் என ஐந்து ஆப்ஷன்களில் டிரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் எந்த மோடை ஆன் செய்தாலும், அதற்கு தகுந்தவாறு ஸ்டீயரிங்கும், சஸ்பென்சனும் கண்ட்ரோல் ஆகிவிடும். உதாரணமாக ஸ்போர்ட் மோட் என எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்றவாறு ஸ்டீயரிங் கண்ட்ரோல் கிடைக்கும். அதேபோல் இதற்காகக் கொடுக்கப்பட்ட பொத்தானை அழுத்தினால் சஸ்பென்சனுக்குப் போகும் ஆயிலின் அளவும் கட்டுப்படுத்தப்படும். மொத்ததில் அல்ட்ரா மாடர்னாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மார்க்கெட்டுக்கு வரப்போகிறது புதிய ஆக்டாவியா. பிளேக் எடிசன் ஆக்டாவியாவைத் தவிர, 7 இருக்கைகள் கொண்ட கொடியாக், ஆர் வேரியண்ட் ஆக்டாவியா, ரேபிட் மாண்ட் கார்லோ ஆகிய மாடல்களும் இந்தியாவுக்கு வரவுள்ளன. இதைத் தவிர விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குவதற்கான சர்வீஸ் சென்டர்களை அமைக்க ரூ.100 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ஸ்கோடா. மொத்தத்தில் அடுத்த ஆண்டு மேலும் பல புதுமைகளுடன், வாடிக்கையாளர்களின் சேவைத் தரத்தை உயர்த்த பல்வேறு அதிரடித் திட்டங்களை வகுத்துக் காத்திருக்கிறது ஸ்கோடா.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply