லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் மாடலுக்கு 3 புதிய பேக்கேஜ்கள் அறிமுகம்

Loading...

%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9லம்போர்கினி நிறுவனம், தங்களின் ஹூராகேன் மாடலுக்கு 3 புதிய பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளனர். ஹூராகேன் மாடலுக்கான 3 புதிய பேக்கேஜ் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
லம்போர்கினி ஹூராகேன்…
லம்போர்கினி ஹூராகேன், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் லம்போர்கினி நிறுவனம் தயாரித்து வழங்கும் சூப்பர் கார் ஆகும். இது, உலகில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் மிக வேகமான சூப்பர் கார்களில் ஒன்றாக உள்ளது.
கிட்கள்;
ஒவ்வொரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும், கூடுதலான கிட்கள் தயாரிக்கப்படுவது வழக்கம். இதே போல் தான், லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
லம்போர்கினியின் கிட்கள்;
ஆனால், லம்போர்கினி நிறுவனமே தங்களின் கார்களுக்கு தாங்களே கிட் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. லம்போர்கினியின் இந்த நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லம்போர்கினியின் பேக்கேஜ்;
லம்போர்கினி நிறுவனம், ஹூராகேன் சூப்பர் காருக்கு, ஏரோ பேக்கேஜ், அஸ்தெடிக் பேக்கேஜ் மற்றும் செண்டர் லாக் கிட் என 3 பேக்கேஜ்களை வழங்குகின்றனர். இந்த பேக்கேஜ்கள், ஆஃப்டர் சேல்ஸ் பேக்கேஜ் (after sales packages) எனப்படும் விற்பனைக்கு பிந்தைய பேக்கேஜ் முறையில் வழங்குகின்றனர்.
ஏரோ கிட்;
லம்போர்கினி வழங்கும் ஏரோ கிட்டுடன் வாடிக்கையாளர்கள் ஃபிரண்ட் ஸ்பாய்லர், சைட் ஸ்கர்ட்ஸ், பெரிய ரியர் விங் உடைய ரியர் டிஃப்யூசர் ஆகியவை கிடைக்கும். ஒவ்வொரு ஆக்ஸசரீஸும், லேசான மற்றும் காம்போசிட் மெட்டீரியல்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸசரீஸ்கள் பிளாக் மேட் ஃபினிஷுடன் கிடைக்கும். இந்த கிட்கள் வின்ட் டன்னல்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இவை தான் சந்தைகளில் கிடைக்கும் ஒரே ஓஇஎம் ஹூராகேன் கிட் என்றும் லம்போர்கினி நிறுவனம் தெரிவிக்கிறது.
அஸ்தெடிக் பேக்கேஜ்;
லம்போர்கினி வழங்கும் அஸ்தெடிக் பேக்கேஜ்ஜில், ப்ரீ-கட் ரேசிங் கிராஃபிக்ஸ்கள் உள்ளது. இவை, மேட் பிளாக், கிளாஸி பிளாக் மற்றும் ரெட் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகுகிறது.
செண்டர் லாக் கிட்;
லம்போர்கினி நிறுவனம் வழங்கும் செண்டர் லாக் கிட்டில், சூப்பர் ட்ரோஃபியோ டிசைன் பிரபாவம் கொண்ட ரேசிங்கிற்கான விவரக்குறிப்புகள் உடைய 20 இஞ்ச் ரிம்கள் உள்ளன. பிளாக் நிறத்திலான ஃபினிஷிங் செய்யபட்ட இந்த ரிம்கள், கார் உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம்.
விலை;
லம்போர்கினி நிறுவனம் வழங்கும் இந்த கிட்களின் அழுவர் ரீதியான விலைகள் இன்னும் இது வரை வெளியிடப்படவில்லை.
அறிமுகம்;
லம்போர்கினி நிறுவனம் வழங்கும் இந்த கிட்கள் தற்போது உலகம் முழுவதும் கிடைக்கிறது.
வாரண்டிக்கு சிக்கல்?
லம்போர்கினி நிறுவனம் வழங்கும் இந்த கிட்கள் நேரடியாக கார் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்தே வழங்கப்படுவதால், இவற்றை பொருத்தினாலும், காரின் வாரண்டிக்கு எந்த விதமான சிக்கலும் இருக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply