ரெனோ மேகன் பிரிமியம் செடான் ஸ்பை படங்கள் வெளியாகியது

Loading...

%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9fரெனோ நிறுவனம் தயாரிக்கும் ரெனோ மேகன் செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம் தான், மேகன் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை தயாரித்து வருகிறது. ரெனோ நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது. இதில் மிக முக்கியமாக க்விட், டஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில், மேகன் போன்ற மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. ரெனோ மேகன் பிரிமியம் செடான், துருக்கியில் புர்ஸா என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ரெனோ மேகன் பிரிமியம் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;
ரெனோ மேகன் பிரிமியம் செடானின் சோதனைகள், துருக்கியில் புர்ஸா என்ற இடத்தில் அமைந்துள்ள ரெனோ உற்பத்தி ஆலை அருகே மேற்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

மாற்று;
ரெனோ மேகன் பிரிமியம் செடான், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்றாக விளங்கும். ரெனோ மேகன், உலகின் பல்வேறு சந்தைகளில், ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

4-வது மாடல்;
தற்போது, ஸ்பை படங்கள் வெளியாகிய ரெனோ மேகன் பிரிமியம் செடான், 4-வது மாடல் ஆகும். ஆனால். இது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் மாடல் ஆகும்.

அறிமுகம்;
ரெனோ மேகன் பிரிமியம் செடான், மொத்தம் 20 நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில், ரெனோ மேகன் பிரிமியம் செடான் 2017-ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ரெனோ மேகன் பிரிமியம் செடான், இந்தியாவில் தயாரிக்கபட்டதாக இருக்குமா அல்லது இருக்குமா என்பது குறித்து, எந்த விதமான தகவல்களும் இல்லை.

இஞ்ஜின் தேர்வுகள்;
சர்வதேச சந்தைகளுக்கான ரெனோ மேகன் பிரிமியம் செடான், 2 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 3 டீசல் இஞ்ஜின்கள் என மொத்தம் 5 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

கியர்பாக்ஸ்;
ரெனோ மேகன் பிரிமியம் செடானின் அனைத்து இஞ்ஜின்களும், தேர்வு முறையிலான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், இது ஃபிரண்ட் வில் டிரைவ் வசதி கொண்டிருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply