ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

Loading...

%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-1-0-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9fபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ரெனோ க்விட் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும் ஆவலை ஏற்படுத்திய இந்த காரின் ஏஎம்டி மாடல் இப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த புதிய கார் இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஒரு சில சிறிய டிசைன் மாற்றங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 காரை குறித்து வைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. க்விட் காரின் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
வேரியண்ட்டுகள்
ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் RxT மற்றும் RxT[O] ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.
வித்தியாசம்
800சிசி மாடலுக்கும் இதற்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்த காரின் சைடு மிரர்களில் இரட்டை வண்ணம் கொடுக்கப்ட்டிருப்பதுடன், பாடி டீகெல் எனப்படும் அலங்கார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த மாடலை வேறுபடுத்தும் அம்சம்.
எஞ்சின்
ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் மாடலில் இருக்கும் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் வழங்கும். தற்போது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் ஏஎம்டி மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மைலேஜ்
ரெனோ க்விட் காரின் 800சிசி மாடல் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாடல் லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வசதிகள்
நேவிகேஷன் வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், பிளாஸ்டிக் கிளாடிங், சென்ட்ரல் லாக்கிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை இதன் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பூட்ரூம்
இந்த காரில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளன. அதேபோன்று, 180 மிமீ தரை இடைவெளி கொண்டது.
பாதுகாப்பு
டிரைவருக்கான ஏர்பேக் ஆப்ஷனலாகவும், ப்ரீடென்ஷனர், லோடு லிமிட்டர் தொழில்நுட்பம் கொண்ட சீட் பெல்ட் வழங்கப்படுகிறது. ஆனால், இன்னமும் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயம்.
விலை விபரம்
ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் RxT வேரியண்ட் ரூ.3,82,776 எக்ஸ்ஷோரூம் விலையிலும், RxT5[o] வேரியண்ட் ரூ.3,95,776 எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்திருக்கிறது. இது போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி
மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் இயான் மற்றும் மாருதி வேகன் ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஏற்கனவே, 800சிசி க்விட் கார் விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் நிலையில், இந்த புதிய மாடல் ரெனோ க்விட் காரின் விற்பனைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply