யோகாசனம் & முத்திரை

Loading...

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும்.


அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும்.


“யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள்.


உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர்.


மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.ஆசனப் பயிற்சிஉட்காசனம்பத்மாசனம்வீராசனம்யோகமுத்ராஉத்தீதபத்மாசனம்சானுசீரானம்பஸ்திமோத்தாசனம்உத்தானபாத ஆசனம்நவாசனம்விபரீதகரணிசர்வாங்காசனம்ஹலாசனம்மச்சாசனம்சப்தவசீராசனம்புசங்காசனம்சலபாசனம்தணுராசனம்வச்சிராசனம்மயூராசனம்உசர்ட்டாசனம்மகாமுத்ராஅர்த்தமத்த்ச்யோந்தராசனம்சிரசாசனம்சவாசனம்மயூராசனம்உசர்ட்டாசனம்அர்த்த மத்ச்யோந்திராசனம்அர்த்த சிரசானம்சிரசாசனம்நின்ற பாத ஆசனம்பிறையாசனம்பாதாசுத்தானம்திருகோணசனம்கோணாசனம்உட்டியானாநெளலிசக்கராசனம்சவாசனம்/சாந்தியாசனம்பவனமுத்தாசனம்கந்தபீடாசனம்கோரசா ஆசனம்மிருகாசனம்நடராசா ஆசனம்ஊர்த்துவ பதமாசனம்பிரானாசனம்சம்பூரண சபீடாசனம்சதுரகோனோசனம்ஆகர்சன தனூராசனம்ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்உருக்காசனம்ஏக அத்த புசங்காசனம்யோகா நித்திரைசாக்கோராசனம்கலா பைரப ஆசனம்அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்கவையாசனம்பூர்ண நவாசனம்முக்த அகத்த சிரசாசனம்ஏகபாத சிரசாசனம்13237757_1052695791467522_4872209037774205911_n

13178803_1052695094800925_4228365383065296896_n

13178903_1052695511467550_9036304023784734459_n

13087801_1041488252588276_4783359809745295593_n

13091889_1041485435921891_3882336598596141529_n

13095926_1041489055921529_3153380987610380970_n

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.
மகா சிரசு முத்திரை
மோதிர விரல் உள்ளங்கை நடுவிலும், ஆட்காட்டி, நடு, கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.
பலன்கள்: காலை, மாலை என 10 நிமிடங்களுக்கு செய்ய, தலைவலி நீங்கும். இந்த முத்திரை செய்வதால், தலை மற்றும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். தலையில் நீர்கோத்து ஏற்படும் தலைவலி, சைனஸ் தலைவலிக்கு (Sinusitis) சிறந்த தீர்வாக அமையும்
13260156_1055358117867956_5722458005250063243_n

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
பிராண முத்திரை
மோதிர விரல், சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கை அல்லது ஒரு கையிலும்கூட இந்த முத்திரை பிடிக்கலாம்.
பலன்கள்: 20 – 40 நிமிடங்கள் செய்யலாம். தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த முத்திரையைச் செய்துவர, ஒற்றைத் தலைவலிப் பாதிப்பு குறையும்.
13241279_1055361141200987_1234766770486564118_n

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
சின்மய முத்திரை
சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும்.இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.
பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
13267721_1055361687867599_6215231798969640272_n

அர்த்தசின் முத்திரை
ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்: 10 – 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.

13233031_1055362074534227_740322271161777176_n

அபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (mudra of the heart) !!!

நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து
ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.
இந்த முத்திரை “அபான முத்திரை” மற்றும் “வாயு முத்திரை” இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

அபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.
• உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
• நெஞ்சு படபடப்பு குறையும்.
• வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
• மூலநோய் குணமாகும்.
• உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
• சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
• உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).
• இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
• உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)
• வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.
• இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.
• இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.
• ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது “சார்பிட்ரேட்” உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்.

13240092_1055362467867521_5378484715064359490_n

அபானமுத்திரை –
(சர்க்கரைநோய், வாயுக்கோளாறுகளை கட்டுப்படுத்தும்):

நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
பஞ்சபூத தத்துவப்படி கட்டை விரல் (பெருவிரல்) நெருப்பை குறிக்கும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் பூமியையும் குறிக்கும். இந்த முத்திரையில் ஆகாயம் மற்றும் பூமியின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாக இருக்கும்.

இந்த முத்திரை செய்யும்போது ஆகாஸ் முத்திரை மற்றும் பிரித்வி முத்திரையின் சக்தியும் கிடைக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி உடல் உறுப்புகளை சக்தியுடன் இயங்கச்செய்கிறது.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

அபான முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

• இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
• இது வாயுக்கோளாறையும், மலச்சிக்கலையும், வயிறு சார்ந்த
நோய்களையும் நீக்குகிறது.
• இது மூல நோயை குணப்படுத்துகிறது.
• இது மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்துகிறது.
• இது கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்களை குணப்படுத்துகிறது.
• இது உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கி உறுப்புகள்
சக்தியுடன்
இயங்கச்செய்கிறது.
• இது மனதை அமைதிப்படுத்துகிறது.
• இது தன்னம்பிக்கையும், ஞாபகசக்தியை அதிகப்படுத்துகிறது.
• இது வியர்வை குறைவாக இருப்பவர்களுக்கு வியர்வையை
அதிகப்படுத்துகிறது.
• இது ஜீரண சக்தியை நன்றாக செயல்பட வைக்கிறது.
• இது சிறுநீர்ப்பை கோளாறுகளை சரி செய்கிறது.
• இது உடல் முழுவதும் உள்ள வெப்ப எரிச்சலை சரி செய்கிறது.
• இது உடலில் உள்ள கழிவு நீக்கும் உறுப்புகள் நன்றாக செயல்பட்
வைக்கிறது.

இந்த முத்திரையை வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி சமயத்தில் பயிற்சி செய்யக்கூடாது. இந்த முத்திரையை மகப்பேறு காலத்தில் முதல் 8 மாதங்களுக்கு இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது. 8 மாதம் முடிந்தபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் குழந்தைப்பேறு பிரசவம் சிரமமில்லாமல் இருக்கும்.
இந்த முத்திரை பயிற்சி செய்து நோயின்றி வாழ்க வளமுடன்.

13266030_1055362804534154_73129703057503631_n

சூரிய முத்திரை: ( Mudra to reduce weight & Cholesterol) !!!

நமது மோதிர விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

சூரிய முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
• உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.
• ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.
• தைராய்டு நோயை நீக்கும்.
• தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
• உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும்.

13240716_1055363334534101_550207671375129706_n

சூன்ய முத்திரை !!!

(காது நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்)
நமது நடு விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

சூன்ய முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

• இந்த முத்திரை காது சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ( காது
கேளாமை, காது இரைச்சல், உட்காது கோளாறு காரணமாக கிறுகிறுப்பு ).
• திடீரென்று பேச்சு நின்றுபோவதை குணப்படுத்தும்.
• வாத சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.
• விமானத்தில் பயணம் செய்யும்போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் காதில்
அடைப்பு ஏற்படாது.

13164485_1055363537867414_3926077671588516697_n

வாயு முத்திரை: (வாதநோய் குணப்படுத்தும்.)
நமது ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி காலையில் செய்வது மிகவும் நல்லது.

வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இந்த முத்திரை வயிறு மற்றும் குடல்களில் உள்ள வாயு தொந்தரவுகளைப் போக்கும்.
• மலச்சிக்கலை நீக்கும்.
• வாதநோய், மூட்டழற்சி, கீல்வாதம், கை கால் நடுக்கம், பக்கவாதம் நோய்களை குணப்படுத்தும்.
• கழுத்து எலும்பழற்சி, முகவாதம், உட்காது கோளாறினால் கிறுகிறுப்பு, தலைசுற்றல் நோய்களை குணப்படுத்தும்.
• மன அழுத்தம், பொறுமையின்மை, பதட்டம் இவைகளை போக்கும்.

13245485_1055365871200514_4628211371648331501_n

பிராண முத்திரை (உடலுக்கு அதிக சக்தி தரும் முத்திரை )

நமது மோதிர விரல் நுனியும் சிறு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

பிராண முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீண்ட ஆயுளைக்கொடுக்கும்.
• நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
• வைட்டமின் குறைபாடுகளை மற்றும் உடல் களைப்பை போக்கும். உடலுக்கு அதிக
சக்தியை கொடுக்கும்.
• இரத்த அழுத்த நோயை குணப்படுத்தும்.
• தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கம் வரும்.
• சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கி சிறுநீர் சிரமமில்லாமல் வரும்.
• பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வலியுடன் கூடிய அதிக இரத்தம் போவதை
குணப்படுத்தும்.

13240694_1055366397867128_3060611535486361854_n

அபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (mudra of the heart)

நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து
ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.
இந்த முத்திரை “அபான முத்திரை” மற்றும் “வாயு முத்திரை” இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

அபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.
• உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
• நெஞ்சு படபடப்பு குறையும்.
• வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
• மூலநோய் குணமாகும்.
• உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
• சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
• உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).
• இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
• உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)
• வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.
• இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.
• இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.
• ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது “சார்பிட்ரேட்” உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்.

13244844_1055368664533568_311030637646430626_n

விஷ்ணு ஆசனம்

வழிமுறைகள்

வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும்.

வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும்.

இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.

கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும்.

இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.

காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும்.

பின் காலை கீழே கொண்டு வரவும்.

இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும்.

ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும்.

பலன்கள்
இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.

கவனம்

இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உகந்த ஆசனம் அல்ல.

13442144_1069085059828595_6200432333917058048_n

சிசு ஆசனம்

வழிமுறை

குதிகாலில் அமர்ந்து கொண்டு, புட்டத்தை குதிகால் மீது வைக்கவும். பின்னர், தரையை நோக்கி சாய்ந்து நெற்றியை தரையில் பதிக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்க, கைகளை உடலின் பக்கத்தில் தரையில் வைத்துக் கொள்ளவும். மார்பகத்தை தொடையோடு படச்செய்யவும். பின், எழுந்து வஜ்ரா ஆசனத்திற்குத் திரும்பவும்.

பலன்கள்

உடலின் பின்புறத்தின் களைப்புகளைக் களையும். மலச்சிக்கலை தவிர்க்கும். நரம்பு மண்டலத்தை சாந்தமாக்கும்.

கவனம்

கர்ப்பிணி பெண்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல.

வயிற்றுப்போக்கு (பேதி) உள்ளவர்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல.

13428613_1069086923161742_4425646413660113648_n

ஷலபாசனம்

இது வெட்டுக்கிளி ஆசனம் எனப் பொருள்படும்.

வழிமுறைகள்

உடலின் முன்புறம் தரையில் படும்படி படுத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, வலது காலை மெல்ல மேலே தூக்கவும். இடுப்பை வளைக்காமல், காலை நேராக வைத்துக் கொண்டு மேலே தூக்கவும்.

மேலே தூக்கியநிலையில் காக்கவும்.

பின் மூச்சை வெளியேவிட்டபடி வலது காலை மெல்ல கீழே கொண்டு வரவும்.

இதே வழிமுறைகளைக் கொண்டு இடது காலை மேல்தூக்கி கீழ் இறக்கவும்.

பின், இரண்டு கால்களுடன் செய்யவும்.

பலன்கள்

உடலின் பின்புறத்திற்கு பலத்தை தரும்.

தோள்பட்டையும் கையும் வலிமை பெறும்.

கழுத்து மட்டும் தோள்பட்டையின் தசைகள் மற்றும் நரம்புகளை சீராக்கி, வலிமையாக்கும்.

வயிற்று உறுப்புக்களை சீராக்கி, செரிமாணத்தை சீராக்கும்.
13432389_1069087556495012_7392841833551790028_n

யோகாசனத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும் தோப்புக்கரணம் !!!

யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும்

கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.

சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகzககுறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.

மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும். மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும் கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.

இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.

சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி

தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும்

இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு

தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

13417494_1071687926234975_7225926882499716090_n

உடல்,மனம்,ஆன்ம அழுக்குகளை நீக்கும் முத்திரை !!!

மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளே பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கு மூல காரணமாக உள்ளன

“தூய்மைப்படுத்தும் முத்திரை’ குறித்து காணலாம்.

முத்திரைகளின் செயல்பாடுகள்

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தந்திர யோக முத்திரைகளும் மூன்று நிலைகளில் செயல்படுகின்றன.

✷ உடல் சார்ந்த நிலை

✷ மனம், எண்ணம் சார்ந்த நிலை

✷ ஆன்மிக நிலை

ஒரு முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதலில் அதன் பலன்களை நமது பருவுடலில் மட்டுமே உணரமுடியும். இதையே உடல் சார்ந்த நிலை செயல்பாடு என்கிறோம்.

அதே முத்திரையை மேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, நமது எண்ணங்களிலும் உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உணரமுடியும். இதையே மனம் சார்ந்த நிலை செயல்பாடுகள் என்கிறோம்.

அதே முத்திரையை மேலும் தொடர்ந்து செய்துவந்தால் சக்தி உடல்களில் பல மாற்றங்கள் நிகழத் துவங்கும். மனமும் எண்ணங்களும் இரண்டாவது நிலையில் பண்பட்ட பின்னரே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடுகளை உணரமுடியும். இதுவே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடு களாகும்.

“தூய்மைப்படுத்தும் முத்திரை’ என்பது நமது பருவுடலில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் அகற்றி, உடலைத் தூய்மைப்படுத்தும் ஒரு அற்புதமான முத்திரையாகும்.

இதே முத்திரையை நமது எண்ணங் களில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றவும் பயன் படுத்த முடியும்.

மனமும் எண்ணங்களும் சீராகும் போது அவற்றோடு தொடர்புடைய மனோமய கோசமும் விஞ்ஞானமய கோசமும் சீராகும். மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப்பதிவுகள் அனைத்தும் அகன்றுபோகும்.

அவற்றால் உருவான நோய்களும் மறைந்து போகும்.

செய்முறை

✷ இரு கைகளின் விரல்களையும் அகல விரித்துக்கொள்ளுங்கள்.

✷ பெருவிரலை மடித்து, அதன் நுனிப் பகுதியால் மோதிர விரலின் கீழ்பகுதியில் உள்ள கோட்டைத் தொடவும்.

✷ அழுத்தம் வேண்டாம். சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.

✷ முழுக் கவனத்தையும் முத்திரையின்மீது பதியுங்கள்.

✷ கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

அமரும் முறை

✷ ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

✷ ஆசனங்களில் பரிச்சயமில்லாதவர்கள் சாதாரணமாக கால்களை மடக்கி சம்மண மிட்டு அமர்ந்தும் செய்யலாம். (இதையே “சுகாசனம்’ என்கிறோம்.)

✷ கால்களை மடக்கி தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். (உள்ளங்கால்கள் பூமியில் பதிந்திருக்கட்டும்).

✷ நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் கூட, படுத்த நிலையிலேயே இந்த முத்திரை யைச் செய்யலாம்.

✷ எந்த நிலையிலிருந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருப்பது அவசியம்.

சுவாசம்

✷ இயல்பான சுவாச நடை.

✷ சுவாசம் சற்றே ஆழமாகவும் சீராகவும் இருந்தால் போதும்.

✷ மூச்சை உள்ளே அடக்கும் “கும்பகம்’ கூடாது.

எப்போது செய்வது?

✷ தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்வதற்கு ஏற்ற நேரம் காலை வேளைதான்.

✷ காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்துவிட்டு இந்த முத்திரையைச் செய்யத் துவங்குங்கள்.

✷ ஒரு கப் நீர் வேண்டுமானால் அருந்தி விட்டுச் செய்யலாம்.

✷ காலை எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் குடித்தால் 30 நிமிடங்களுக்கு பின்னர் முத்திரையைச் செய்யலாம்.

✷ வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

✷ அதிகாலையிலேயே எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர்கள் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு முதல் ஐந்து மணி வரையுள்ள நேரத்தில் முத்திரைகளைச் செய்தால் பலன்கள் மேலும் அதிகமாகும்.

எவ்வளவு நேரம்?

✷ தினமும் காலையில் 15 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும்

✷ பருவுடலில் தேங்கி நிற்கும் அழுக்குகளை அகற்ற தொடர்ந்து 15 நாட்கள் மட்டும் செய்தால் போதும்.

✷ மனோமய கோசத் தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளை அகற்ற குறைந்தபட்சமாக மூன்று மாதங்கள்- அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டும்.

பலன்கள்

தூய்மைப்படுத்தும் முத்திரையைத் தொடர்ந்து செய்துவரும்போது படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நிலை பலன் களையும் உணர முடியும். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே காணலாம்.

1. பருவுடல் சார்ந்த பலன்கள்

இந்த முத்திரையைச் செய்யும்போது முதல் 15 நாட்களிலேயே பருவுடல் சார்ந்த பலன்கள் முழுமையாகக் கிட்டிவிடும்.

✷ உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தும் முழுமையாக வெளியேறும்.

✷ பல வருடங்களாக உடலினுள் தேங்கிக் கிடக்கும் நச்சுப் பொருட்களும் வெளியேறிவிடும்.

✷ உடல் தூய்மையடையும்.

✷ உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும்.

✷ அசதி, உடல் சோர்வு, மந்தத் தன்மை போன்றவை மறைந்து போகும்.

✷ உடல் லேசாகும்.

✷ கழிவுப் பொருட்களின் தேக்கத்தால் பருவுடலில் உருவான நோய்களின் தாக்கம் படிப்படியாகக் குறையும்.

இந்த முத்திரையைச் செய்யத் துவங்கும் போது முதல் மூன்று நாட்களில் எந்த மாற்றமும் தெரியாது. நான்காவது நாளிலிருந்து கழிவுப் பொருட்கள் சிறிது சிறிதாக உடலைவிட்டு வெளியேறத் துவங்கும். இவை எந்த வழியாக வெளியேறுகின்றன என்பதைப் பொறுத்து பல மாற்றங்களை உணரமுடியும்.

கழிவுப் பொருட்கள் மலம் வழியாக வெளியேறும்போது

✷ மலம் சற்றே இளகலாகப் போகக்கூடும்.

✷ மலத்தின் நிறம் மாறும். கரும்பச்சை அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.

✷ சிலருக்கு சளி சளியாக மலத்தில் வெளியேறும்.

✷ வெளியேறும் மலத்தின் அளவும் வீச்சமும் அதிகமாக இருக்கும்.

✷ தேங்கி நிற்கும் நச்சுப் பொருட்களின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிலருக்கு சற்றே வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இது நல்லதே. இதை நிறுத்த மாத்திரைகள், மருந்துகள் எதுவும் எடுக்கக்கூடாது. நச்சுப் பொருட்கள் ஓரளவு வெளியேறிய பின்னர் இது தானாகவே நின்றுவிடும்.

சிறுநீர் வழியாக வெளியேறும்போது

✷ சிறுநீரின் அளவு அதிகமாகும்.

✷ அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய திருக்கலாம்.

✷ சிறுநீர் ஆழ்ந்த மஞ்சள் அல்லது பிரௌன் நிறமாக மாறலாம்.

✷ வீச்சமும் அதிகமிருக்கும்.

வியர்வை வழியாக வெளியேறும்போதுசிலருக்கு நச்சுப் பொருட்கள் வியர்வை வழியாகக்கூட வெளியே வரும். குறிப்பாக, நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இது அதிகமாக நிகழும்.

✷ வியர்வையின் அளவு அதிகமாகும்.

✷ சிலருக்கு வியர்வையினால் உடலில் உப்புப் பூத்ததுபோன்று தோன்றும்.

✷ வியர்வை நாற்றமும் அதிகமாகலாம்.

✷ இரவில்கூட சிலருக்கு அதிகமாக வியர்த் துக்கொட்டும்.

உமிழ்நீரில் வெளியேறும்போது

சில வகை நச்சுப் பொருட்கள் உமிழ்நீரின் வழியாகவும் வெளியேறக் கூடும். இவ்வாறு வெளியேறும்போது-

✷ உமிழ்நீரில் கசப்புத்தன்மை தோன்றலாம்.

✷ சிலருக்கு வாயில் உலோகச் சுவை தோன்றும்.

✷ உமிழ்நீரின் சுரப்பு அதிகமாகலாம்.

மூச்சுக்காற்றில் வெளியேறும்போது

சில நச்சுப் பொருட்கள் மூச்சுக் காற்றின் வழியாகவும் வெளியேறும்.

✷ மூச்சுக் காற்றில் ஒருவித துர்வாசனை, கந்தக நெடி போன்றவை தோன்றும்.

குறிப்பு

✷ நச்சுப் பொருட்கள் இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் அல்லது பல வழிகளில் உடலைவிட்டு வெளியேறும்.

✷ சிலருக்கு மலம், சிறுநீர், வியர்வை, உமிழ்நீர், மூச்சுக்காற்று ஆகிய அனைத் திலுமே மாற்றங்கள் ஏற்படலாம்.

✷ இந்த மாற்றங்கள் முத்திரையைத் துவங்கிய நான்காவது நாளிலிருந்து தோன்றத் துவங்கும். சுமார் ஏழு நாட்கள் வரையில் தொடரும்.

✷ முத்திரை துவங்கிய 11 அல்லது 12-ஆவது நாளில் இந்த மாற்றங்கள் அனைத்தும் தானாகவே நின்றுவிடும். அவ்வாறு நிற்கும்போது நச்சுப் பொருட்கள் அனைத்தும் உடலைவிட்டு வெளியேறிவிட்டன என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

✷ சிலருக்கு- குறிப்பாக போதைப் பொருட்களை அதிக அளவில் நீண்டகாலம் உபயோகிப்பவர்களுக்கும், பல வருடங்களாக மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து உபயோகித்து வருபவர்களுக்கும் உடலில் நச்சுப் பொருட்களின் தேக்கம் மிக அதிக அளவில் இருக்கலாம். இவர்களுக்கு மட்டும் நச்சுப் பொருட்கள் முழுமையாக வெளியேறி முடிய மேலும் சில நாட்கள் ஆகலாம்.

✷ நச்சுப் பொருட்கள் முழுமையாக வெளியேறிய பின்னர் மேலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் இந்த முத்திரையைச் செய்த பின்னர் நிறுத்திக் கொள்ளலாம். (உத்தேசமாக 15 நாட்கள்).

அடுத்த நிலை பலன்களும் வேண்டுமென் றால் தொடர்ந்து முத்திரையைச் செய்துவர வேண்டும்.

2. மனம் சார்ந்த பலன்கள்

✷ மனதிலுள்ள கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அகலும்.

✷ நேர் சிந்தனைகள் மனதில் நிறையும்.

✷ மனம் படிப்படியாகப் பண்படும்.

இதே முத்திரையைத் தொடர்ந்து செய்து, மனம் பண்பட்ட நிலையில் மனோமய கோசத்தில் மாறுதல்கள் நிகழும்.

3. ஆன்மிக நிலை மாற்றங்கள்- பலன்கள்

✷ மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப்பதிவுகள் படிப்படியாக மறைந்து போகும்.

✷ மனோமய கோசம் வலுவாகும்.

✷ சக்கரங்களிலும், நாடிகளிலும், கோசங் களிலும் உள்ள சக்தித் தடைகள் அகலும்.

✷ பந்த பாசங்கள் விலகும்.

✷ மாயையின் கட்டுகள் அவிழும்.

✷ ஆன்மா விடுதலை பெறும்.

குறிப்பு:

ஆன்மிக நிலை பலன்களைப் பெற இந்த முத்திரைப் பயிற்சியை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

13445386_1075946565809111_1476128047350499615_n

விருக்ஷாசனம்

விருக்ஷ என்றால் மரம் என்று பொருள். மரம் போல் நிற்கும் நிலையே விருக்ஷாசனம்.

ஆசனத்தின் படிநிலைகள்

1) ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.

2) நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.

3) நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

4) மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.

5) மடித்துவைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.

6) மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை.

ஆசனம் தரும் பலன்கள்:

1) கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.

2) பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.

3) இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.

4) காலின் வடிவத்தில் அழகு கூடும்.

5) இடுப்புப் பகுதியின் உறுதித்தன்மையைக் கூட்ட உதவும்.

6) இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.

7) விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.

8) கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.

9) தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

13240092_1055362467867521_5378484715064359490_n1

ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ???

நம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு உடலின் எந்த பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் சரி செய்ய முடியும் என்பார்கள்.

அதே போல நமது உள்ளங்கை மற்றும் கைவிரல்களை கொண்டு பயிற்சி செய்வதாலும் கூட தலை முதல் கால் வரை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முடியும் என்று கூறுகிறார்கள்.
இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. மிக எளிய முறையில் மசாஜ் செய்தலே போதுமானது…

கட்டைவிரல் :

தலைவலி, மன அழுத்தம்
நமது கட்டைவிரல் மண்ணீரல், வயிறு மற்றும் உணர்வுகளோடு தொடர்புடையது.
தலைவலி, மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படும் போது, உங்கள் கட்டைவிரலை பிடித்து, கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மிருதுவாக மசாஜ் போன்று செய்து வந்தால் மன அழுத்தம், தலை வலி குறையும்.

13775768_1095286023875165_5661424305725422156_n

ஆள்காட்டி விரல் :

தசைவலி, விரக்தி நமது ஆள்காட்டி விரல் அச்சம், குழப்பம், சிறுநீரகம் போன்றவற்றுடன் தொடர்புடையது, ஆள்காட்டி விரலுக்கு மசாஜ் செய்வதால் சிறுநீரக செயல்பாடு கோளாறுகள் குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் தசைவலி, முதுகுவலி கை கால் வலி போன்றவற்றுக்கும் இது தீர்வு தருகிறது.

13716021_1095286667208434_5040979799330079467_n

நடுவிரல் :

மயக்கம், சோர்வு, கோவம்
உங்கள் நடுவிரலுக்கு மிருதுவாக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் கல்லீரல் பிரச்சனை, இரத்த ஓட்டம் போன்றவை சரி ஆகின்றன. மேலும் இது கோவத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் இந்த பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயனளிக்கிறது.

13718562_1095287337208367_5358600344202122346_n

மோதிர விரல் :

செரிமானம், எதிர்மறை எண்ணங்கள்

மோதிர விரலுக்கு மசாஜ் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள், மனக் குழப்பங்கள், செரிமான கோளாறுகள் போன்றவை குறைகின்றன.
சற்று அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் சுவாச கோளாறுகள் மற்றும் நெஞ்சு வலிக்கும் கூட நிவாரணமாக அமைகிறது இந்த பயிற்சி. இந்த பயிற்சியை செய்யும் போது நீங்கள் அமைதியான சூழலில், மூச்சை நன்கு இழுத்து விட வேண்டியது அவசியம்.

13775630_1095288310541603_610942899277618061_n

சுண்டுவிரல்:

பதட்டம், தன்னம்பிக்கை

மிகவும் உணர்ச்சிமிக்க நபர்களாக இருப்பவர்கள் சுண்டு விரலுக்கு மசாஜ் செய்வதால் அச்ச உணர்வுகளில் இருந்து வெளிவர முடியும். மற்றும் இது சீரான, தெளிவான எண்ணங்கள் பிறக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறதாம்
13716058_1095288720541562_3579142684941768916_n

தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை..!

தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

மகா சிரசு முத்திரை

மோதிர விரல் உள்ளங்கை நடுவிலும், ஆட்காட்டி, நடு, கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.
பலன்கள்: காலை, மாலை என 10 நிமிடங்களுக்கு செய்ய, தலைவலி நீங்கும். இந்த முத்திரை செய்வதால், தலை மற்றும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். தலையில் நீர்கோத்து ஏற்படும் தலைவலி, சைனஸ் தலைவலிக்கு (Sinusitis) சிறந்த தீர்வாக அமையும்.

13606443_1102320083171759_3691561993223163023_n

கழுத்துவலி குறைக்கும் அனுசாசன் முத்திரை !!!

மருத்துவ பலன்கள்

கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.

செய்முறை:

ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3.5 நிமிடம் செய்யவும்.
13876527_1102320559838378_7919460668706738051_n

தைராய்டு பிரச்சினை தீர்க்கும் சூர்ய முத்திரை !

பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

செய்முறை:

இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
13770473_1102321016504999_5689987883506374475_n

பிராண முத்திரை

சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
முத்திரைகள், கவனக்குவிப்பு, சுயசிகிச்சை, ஆற்றல் சேகரிப்பு மற்றும் சீரான ஆற்றல் விநியோகம் போன்றவற்றுக்காக செய்யப்படுகின்றன. முத்திரைகளை நிருத்த முத்திரை, சில்ப முத்திரை, யோக முத்திரை என மூன்று வகைகளாகச் சொல்வர். நிருத்த முத்திரை என்பது நடனஅடவுகளின் போது செய்பவை. கடவுள் சிற்பங்கள் உட்பட சிற்பங்களின் பாவங்களில் காணப்படுபவை சில்ப முத்திரை. யோக முத்திரைகள் என்பவை தியானத்தின்போதும் உடல்நலக் குறைவின்போதும் செய்பவை. யோக முத்திரையில் உள்ள சின் முத்திரையை தியானம் செய்யும்போது மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தியானம் செய்வதற்கு முன், எண்ண ஒட்டங்களைச் சீர்படுத்தவும் செய்யலாம். உடல் நலக் குறைபாடுகளுக்கு முத்திரைகள் செய்ய வேண்டுமென்றால், தியானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு முத்திரைகளும் அதன் தனித்துவத்துவப் பலன்களைக் கொண்டது.
பிராண முத்திரை செய்யும் முறை
சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
பிராண முத்திரையின் பலன்கள்:
சுண்டு விரல் – நீர், மோதிர விரல் – நிலம், கட்டை விரல் – நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும். உடலுக்கு சக்தி கிடைப்பதால் சோர்வு, மந்தம், களைப்பு உடனடியாகச் சரியாகும். தீவிர முடி கொட்டுதல் பிரச்னை இருந்தாலும் சரியாகும். வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். விந்தணுக்களின் வேகம் அதிகரிக்கும். நரம்புப் பிரச்னைகளால் ஏற்படும் வலிகள் குணமாகும்.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.
சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.
யார் செய்யக் கூடாது?
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது. வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.
13873248_1102321786504922_7990713846872526961_n

வாயு முத்திரை !

சித்தா, வர்மக் கலை போன்ற நம்முடைய பாரம்பரிய மருத்துவங்களில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் வானத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்களையும் சமன் செய்வதற்கு முத்திரைகள் உதவுகின்றன.
விரல்களின் நுனியில் பல்வேறு நரம்புகள் இணைந்திருக்கின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றை மென்மையாக அழுத்துவதன் மூலம், நம் உடலில் உள்ள பிரச்னை
களை சரிசெய்ய முடியும். இதுவே முத்திரைகள்.
சளி, இருமல், சுவாசப் பிரச்னை, தலைவலி, வயிற்று வலி, அஜீரணம் போன்ற சின்னச்சின்ன உடல்நலப் பிரச்னைகளுக்கு, மருந்துகள் இல்லாத சிகிச்சைமுறைகளை பற்றி இனி, ஒவ்வொரு இதழிலும் நாம் பார்க்கலாம்.

வாயு முத்திரை
ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.
வாயுப் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.

முத்திரைகளின் கட்டளைகள்
தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.
விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம்.
வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம்.
காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.
13669089_1102322353171532_5332295873220941065_n

கழிவுநீக்க முத்திரை !

கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிர விரலின் கீழ் அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லிய அழுத்தம் போதுமானது. சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும். ஒரு 20 நிமிடங்கள் செய்யும் போது உடலின் கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும்.

அப்போது சிறுநீர் அதிகம் போவது, அதில் வாடை வீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடி போவது, கறுத்து மலம் வெளியேறுவது. வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடை வீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.
13879320_1102323376504763_1028446318512272018_n
நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை !

நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.
எப்படிச் செய்வது?
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.
கட்டளைகள்
தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.
ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
பலன்கள்
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.
அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.
சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.
வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.
நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.
வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும்.
வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும். மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்.
13645093_1102325013171266_8556457339182819672_n

அபான வாயு முத்திரை மூலம் குணமாக!

அந்தக் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, உடலைச் சுத்தம் செய்ய, நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதி மருந்து எடுத்துக்கொள்வது எனச் சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்ட காலத்திலேயே உடலைச் சுத்தம் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரத்தில் உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும்.
உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.
எப்படிச் செய்வது?
கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
பலன்கள்
வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.
பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.
சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.
மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.
கட்டளைகள்
நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது.
காலை, மாலை இருவேளையும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்னை இருக்கும்போது செய்யக் கூடாது.
கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்.
13686581_1102325959837838_4550054587737733148_n
சம ஆற்றல் தரும் சமான முத்திரை

நமது உடலில் பஞ்சபூதங்களின் ஆற்றல்கள் உள்ளன. விரல்கள் இதன் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. கட்டை விரல் – அக்னி, ஆள்காட்டி விரல் – வாயு, நடு விரல் – ஆகாயம், மோதிர விரல் – நிலம், சுண்டு விரல் – நீர். இந்த ஐம்பூதங்களின் ஆற்றல் உடலில் சமஅளவில் இயங்கும்போது, உடலிலும் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது. இந்த சமவிகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது நோயாக உருவெடுக்கிறது.
பஞ்சபூதங்களில் மண் அதிகமானால், உடலின் எடை அதிகரித்து மந்தத்தன்மை ஏற்படும். இதுவே குறைந்தால், தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். நீர் அதிகமானால், கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் வரும். இது குறைந்தால், சரும வறட்சி, தாகம், வயதான தோற்றம் ஏற்படும். நெருப்பு அதிகமானால், உடல் வெப்பம் அதிகரிக்கும். குறைந்தால், ஹார்மோன் குறைபாடுகள் உண்டாகும். வாயு மற்றும் ஆகாய பூதங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் வரும். எனவேதான் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி, சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலையாவதால், உடலுக்கு அபரிமிதமான ஆற்றல் கிடைக்கிறது.
பலன்கள்
உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது.
அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக, மூளை சுறுசுறுப்படையும்.
பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர, தெம்பு கிடைக்கும்.
உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால், இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.
தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து, சுறுசுறுப்பாகத் தயாராக முடியும். தன்னம்பிக்கை, மன உறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும்.
தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.
நீச்சல், ஓட்டப்பந்தயம், பளுத் தூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபவர்கள், தினமும் செய்துவந்தால் மனம் உறுதியாகும். உடல் சோர்வு அடையாது.
வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும்.
எந்த முத்திரை நமக்குச் சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள், சமான முத்திரையை மட்டும் செய்தாலே போதும், நல்ல தீர்வு கிடைக்கும்.
எப்படிச் செய்வது?
ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவேண்டும்.
கட்டளைகள்
சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து, பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்ய வேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது.
முத்திரை செய்யும்போது, உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
அனைவரும் செய்யலாம்.
13645228_1102326396504461_6142567427016938492_n

மகா சிரசு முத்திரை

‘எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பது பழமொழி. அதாவது, உடலுக்குத் தலை மிகவும் முக்கியம். அந்தத் தலை தொடர்பான பிரச்னைகளுக்குத் சிறந்த தீர்வாக இருப்பது ‘மகா சிரசு முத்திரை’.
‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம். சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

பலன்கள்
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல்போதல் பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
படிப்பில் மந்தத்தன்மையுள்ள மாணவர்கள் இந்த முத்திரையைச் செய்வதால் மூளையில் ரத்த ஓட்டம் சீராகி, மூளை செல்கள் புத்துணர்வு பெறும். படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
மன அழுத்தம் குறையும். வயோதிகத்தால் ஏற்படும் சோர்வு நீங்கும்.
பார்வைத்திறன் குறைபாடு, இமைகளில் ஏற்படும் கட்டி, வீக்கம், கண்களின் வெளிபக்க ஓரங்களில் பார்வை மறைதல் போன்ற பிரச்னையைத் தீர்க்கும்.
காது குறுகுறுப்பு, காதில் நீர் மற்றும் சீழ் வடிதல், காது வலி, காதைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் வலி போன்றவை சரியாகும்.
தாடைகளில் ஏற்படும் வீக்கம், கழலைகள், உமிழ்நீர் சுரப்பி வீக்கம் குணமாகும்.
தொண்டை மற்றும் உள்நாக்கில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, அடிக்கடி சளி வெளியேறுதல் ஆகியவை சரியாகும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.
13645247_1102330836504017_828108020933635334_n

ம்ருத்யூ சஞ்சீவி முத்திரை!

உடல் முழுவதுக்கும் ரத்தத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும் உறுப்பு இதயம். நாம் தூங்கும்போதும் துடிப்போடு செயல்படும்; ஓய்வின்றி உழைக்கும்; ஒரு நிமிடத்துக்கு 70 முறைகளுக்கு மேல் துடிக்கும். தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, ரத்தக் குழாய்களில் படிந்து, அடைப்பை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தால் இதயம் துடிக்கும் அளவு முறையற்றதாகி, இதயத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர். ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.
கட்டளைகள்
தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.
காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும்.
முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.
அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது.
மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.
பலன்கள்
படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னைகள் சரியாகின்றன.
சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்னை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.
வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.
பல்வலி, குதி்கால் வலி, மூட்டுக்களின் உள்ளே குத்துவது போன்ற வலி, கெண்டைக்காலில் தசை இறுக்கம், வலி மற்றும் பிடித்துக்கொள்ளுதல், சிறுநீர் சரியாகப் போகாமல் இருத்தல் ஆகியவற்றுக்குப் பலனளிக்கும்.
நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும்.
ஹார்ட் பிளாக் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.
40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.
எப்படிச் செய்வது?
ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
13782125_1102331616503939_7621377089604056157_n

மூட்டுகளைப் பாதுகாக்கும் சந்தி முத்திரை!

நம் உடலின் அசைவுகளுக்கும் இயக்கத்துக்கும் உதவுபவை மூட்டுகள். இரண்டு எலும்புகளை ஆதாரமாகக்கொண்டு, நடுவில் வட்ட (Disc) வடிவில் இருக்கும். தசைநார்கள், சவ்வு ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று இணைந்து, அதைச் சுற்றிலும் ஈரப்பசையான திரவத்தால் (Synovial fluid) மூடப்பெற்று, ரத்தமும் நரம்புகளும் அதன் வழியாகச் செல்லும் ஓர் அற்புத இயற்கைப் படைப்பு.
ஒரு காலத்தில் 60 வயதில் வந்த மூட்டு வலிப் பிரச்னை, இப்போது 30-40 வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது. உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ பிரச்னைகளில், மூட்டு வலி மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. வலிக்குக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்தாமல், தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவதால், சிறுநீரகப் பாதிப்பு எனும் பின்விளைவு, நம்மைப் பின்தொடர்கிறது. இதற்குத் தீர்வாக மருந்தில்லா மருத்துவமாக, அதாவது நம் கைகளிலே இருக்கக்கூடிய இயற்கை அளித்த கொடைதான், ‘சந்தி முத்திரை.’
மண் மற்றும் ஆகாயம் ஆகிய இரு பூதங்களும் சமன்படுவதால் வலுவற்ற, தளர்வான மற்றும் இறுக்கமான மூட்டுகளுக்கு நிவாரணம் அளித்து அவற்றை உறுதியாக்கும் வேலையை சந்தி முத்திரை செய்கிறது.
கட்டளைகள்
நாற்காலியில் அமர்ந்து, இரண்டு பாதங்களையும் தரையில் ஊன்றிச் செய்யலாம். இயன்றவர்கள் சப்பளங்கால் போட்டு அமர்ந்தும் செய்யலாம். யோகா செய்து பழகியவர்கள் வஜ்ராசனத்தில் செய்தால், சிறந்த பலன் பெற முடியும். வெறும் வயிற்றிலோ, உணவு உண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.
முத்திரையை 20 – 45 நிமிடங்கள் வரை செய்யலாம். பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிபடுவோர், ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஓய்வு நேரத்திலும் செய்யலாம்.
எப்படிச் செய்வது?
வலது கை: பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை: பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கும்.
மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து, வலியைக் குறைக்கும்.
வயோதிகத்தால் மூட்டுகளில் உள்ள ஈரப்பசை குறைவதால் வறட்சி ஏற்பட்டு, நடக்கும்போதும், காலை நீட்டி மடக்கும்போதும் சத்தம் கேட்கும். இதற்கு சந்தி முத்திரை செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தடுக்கும்.
அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும்.
இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை நார் கிழிவுகளில் ஏற்படும் பிறழ்வு, வலி, வீக்கத்துக்குத் தீர்வு கிடைக்கிறது.
வஜ்ராசனத்தில் செய்துவந்தால், 60 வயதில்கூட மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.
சிக்குன்குனியா, வாதஜுரம், டெங்கு போன்ற முடக்குவாதக் காய்ச்சல்களில் மூட்டு வலி அதிகமாக இருக்கும். காய்ச்சல் இருக்கும் போதே படுத்த நிலையிலோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ முத்திரை செய்துவர, உடல் அசதி, வலி, காய்ச்சலால் ஏற்படும் மூட்டுப் பாதிப்புகள் குறையும்.
முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் தசைநார்க் கிழிவு (Ligament tear), மீண்டும் ஒன்றுகூடப் பல நாட்கள் ஆகும். வலியும் தீவிரமாக இருக்கும். இதற்கு சந்தி முத்திரை சிறந்த தீர்வு.
பல வருடங்களுக்கு முன் சிக்குன்குனியாவால் வந்த முடக்குவாதம் மற்றும் மூட்டுவலி, மூட்டுகள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர், தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும்.
தரையில் உட்கார முடியாதோர், வயோதிகத்தால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தவிப்போர், இந்த முத்திரையைச் செய்யலாம்.
13876271_1102332953170472_2313916170424367038_n

உடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை!

உடல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான தீ, கழிவுகளை எரித்து அழிக்கும் தன்மைகொண்டது. உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு, ‘சூரிய முத்திரை’ என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கட்டளைகள்
சப்பளாங்கால் இட்டு 5-10 நிமிடங்கள் வரை செய்தால் போதும். தினமும் இருவேளை, வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
அதிக உடல் எடையுடன் இருப்பவர், முத்திரை செய்யும்போது, கை, கால், தொடைகளில் வலி ஏற்படலாம். தொடர்ந்து செய்யச் செய்ய, படிப்படியாக வலி குறைந்துவிடும். வலி இருக்கும்போது, தண்ணீர் அருந்துவது முக்கியம்.
உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில், இந்த முத்திரையைத் தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.
நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர் தைராய்டு, கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, வாய்ப்புண், வெள்ளைப்படுதல், கண் சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்னை உள்ளவர்கள், இந்த முத்திரையைத் தவிர்க்கலாம்.
எப்படிச் செய்வது?
மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.
அதிக உடல் எடையால் சிலருக்குக் குழந்தைபேறு தள்ளிப்போவதை இந்த முத்திரை தடுக்கும்.
ஹைப்போதைராய்டு பிரச்னை உள்ளவர்கள், ஒரு வேளை மட்டும் 20 நிமிடங்கள் முத்திரையைச் செய்ய, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, உடலைச் சுறுசுறுப்பாக்கும். சரும வறட்சி, குளிரைத் தாங்க முடியாதது, மந்த குணம், மனச்சோர்வு, நாக்கு தடித்தல், தொண்டை வீக்கம் ஆகியவை சரியாகும்.
பார்வைத்திறன் மேம்படும். கண்புரை வராமல் தடுக்கும். கண்களைச் சுற்றி நீர் கோத்ததுபோல இருப்பவர்களுக்கு, வீக்கம் குறையும்.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis) ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.
13880402_1102335336503567_9188145683386486525_n

லிங்க முத்திரை !

முத்திரைகள் என்பவை தந்திர யோகத்தின் ஒரு பகுதி. தந்திரம் (தன் + திறம்) என்பது, கடினமான செயலைக்கூட தன் திறத்தால் செய்து முடிக்கக்கூடியது. நாட்பட்ட நோய்கள், அவசரகாலத் தேவை, தீராத நோய்கள் போன்றவற்றை எளிதாகச் சரிசெய்யும் தன்மை கொண்டது.
லிங்க முத்திரை
லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.
எப்படிச் செய்வது?
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
கட்டளைகள்
சப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.
அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.

பலன்கள்
பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.
வியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.
ஏ.சி-யால் அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.
ஐஸ்க்ரீம், கூல்டிரிங்க்ஸ் குடித்த பிறகு, 10 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைக் குழந்தைகள் செய்தால், சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்கலாம்.
ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.
ஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.
காய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.
தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.
13439145_1102338186503282_7685577376612457279_n

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை!

இம்முத்திரை வயிற்றுக்கு நேராகச் செய்யும்போது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படும், நெஞ்சிற்கு நேராக செய்யும் போது அனாகதம், விசுத்தி சக்கரங்களும், நெற்றிக்கு நேராகச் செய்யும்போது ஆக்ஞா சக்கரமும், தலைக்கு மேல் வைத்து செய்யும் போது சகஸ்ரார சக்கரமும் தூண்டப்பட்டு, பல்வேறு விதமான பலன்களைத் தரும். கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும்.

தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த முத்திரை இது.

செய்முறை : நடுவிரல், மோதிர விரலை மடக்கி, கட்டை விரலை அதன் முதல் ரேகையில் படும்படி வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கும்படி வைக்கவும்.
13879357_1102339459836488_1841677559378608270_n

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும் ருத்ர முத்திரை!

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை.

செய்முறை

கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்

சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.
13645114_1102340589836375_6710469208575184478_n

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!

? உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

? கட்டை விரல்;

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

?ஆள்காட்டி விரல்;

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

?நடுவிரல்;

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

?மோதிரவிரல்;

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

?சிறுவிரல்;

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

?உள்ளங்கை;

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

?மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
13925312_1111163312287436_3910800607630235652_n

நோயை விரட்டும்யோக முத்திரைகள்:

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் – நெருப்பையும்,

ஆள்காட்டி விரல் – காற்றையும்,

நடுவிரல் – வானத்தையும்,

மோதிர விரல் – நிலத்தையும்,

சிறு விரல் – நீரையும் குறிக்கின்றன.

இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

#வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

#சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

#பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

#சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

#வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

#பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

#அபானவாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

#லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

#அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
14079682_1128346077235826_2712245271482256008_n

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply