யூடியூப் புதிய அதிரடி வசதி

Loading...

%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9aஇணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பு, 3D வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர் துல்லியம் (HD) வாய்ந்த வீடியோக்கள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
இவற்றின் வரிசையில் தற்போது HDR தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
HDR என்பதன் விரிவாக்கம் High Dynamic Range ஆகும். இதன் ஊடாக மேம்படுத்தப்பட்ட பல வர்ணங்களைக் கொண்ட வீடியோக்களை உருவாக்க முடியும்.
இதன் காரணமாக காட்சிகள் மிகவும் தத்துரூபமான முறையில் படமாக்கப்படும்.
இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் ஊடாக பார்த்து மகிழ முடியும்.
இச் சேவையானது யூடியூப் தளம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னர் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply