மோட்டார்சைக்கிள்களை கஸ்டமைஸ் செய்யும் யமஹா மை கேரேஜ் ஆப் அறிமுகம்

Loading...

%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b8%e0%af%8dமோட்டார்சைக்கிள்களை வைத்திருப்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாகும். ஆனால், அவற்றை விரும்பியவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ள வாய்ப்புகள் இல்லாமல் பலரும் ஏங்கும் நிலை உள்ளது. 3டி பிரின்டிங் மூலம் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. உற்பத்தி துறைக்கும் உபயோகிக்கப்படும் இந்த 3டி பிரின்டிங்கை, சில உபயோகங்களுக்கு பிரயோகிக்க முடியாத நிலை உள்ளது. பிற துறைகளில், 3டி பிரின்டிங் முறை மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி நிலவி வருகிறது. தற்போது, மெல்லமாக இந்த 3டி பிரின்டிங் தொழில்நுட்பமானது, கூறுகளின் உற்பத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இவை எல்லாவறிற்கும் தீர்வாக, யமஹா நிறுவனம், மை கேரேஜ் ஆப் என்ற பெயரில் ஒரு ஆப் அறிமுகம் செய்துள்ளது. யமஹா நிறுவனம், பியானோ முதல் மோட்டார்சைக்கிள்கள் வரை பல்வேறு பொருட்களை தயாரிக்கிறது. மை கேரேஜ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மோட்டார்சைக்கிள்களை, ஹை-ரெசல்யூஷன் 3டி கிராஃபிக்ஸ் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். யமஹா மை கேரேஜ் ஆப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஆப் மூலம் செய்யப்படும் கஸ்டம் ஃபிட்டிங் மற்றும் இதர மாற்றங்கள், நேரடியாக யமஹா டீலர்ஷிப்களுக்கு அனுப்பபட்டு அதற்கு ஏற்றவாறு கூறுகள் தயாரிக்கபடுகிறது. வருங்காலத்தில், 3டி செட்டிங் மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் ஃபைல்களை அடிப்படையாக கொண்டு 3டி பிரின்டிங் மூலம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply