மேம்படுத்தப்பட்ட புதிய டாடா ஸெனான் பிக்கப் செப்டம்பரில் அறிமுகம்

Loading...

%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9fடாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு வகையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதில், டாடா ஸெனான் பிக்கப் என்ற மாடலும் ஒன்றாகும். தற்போதைய டாடா ஸெனான், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, நீண்ட காலம் ஆகிவிட்டது. இதற்கு மேம்பாடுகள் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதிய டாடா ஸெனான் பிக்கப் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய டாடா ஸெனான் பிக்கப்…
மேம்பாடுகள் செய்யப்பட்டு டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய டாடா ஸெனான் பிக்கப், டாடா ஸெனான் யோதா என்று அழைக்கப்பட உள்ளது. டாடா ஸெனான் யோதா பற்றிய அதிக அளவிலான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், வழக்கம் போல், இதில் புதிய பம்பர், கிரில், வீல்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்டிவை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி;
டாடா ஸெனான் யோதா, இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் மற்றும் ஸ்கார்ப்பியோ கெட்அவே போன்ற மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

பிற அம்சங்கள்;
வி-கிராஸ் மாடலில் உள்ளது போல், டாடா ஸெனான் யோதா-விலும் புதிய இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்படலாம். இதோடு மட்டுமல்லாது, டாடா ஸெனான் யோதா-வின் டேஷ்போர்ட் டிசைன் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை மேம்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

இஞ்ஜின்;
டாடா ஸெனான் யோதா-விற்கு டைகார் (DICOR) மாடல் இஞ்ஜினுக்கு பதிலாக, டாடா சஃபாரி மாடலின் 2.2 லிட்டர் வேரிகார் (VARICOR) இஞ்ஜின் பொருத்தப்படும்.

இஞ்ஜின் வேரியன்ட்கள்;
இந்த வேரிகார் இஞ்ஜின் 2 வேரியன்ட்களில் வெளியாகிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள வேரிகார் இஞ்ஜின், 147 பிஹெச்பியையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள வேரிகார் இஞ்ஜின், 154 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

அறிமுகம்;
டாடா ஸெனான் யோதா, இந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply