மேக்கப் போடும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சருமப் பாதுகாப்புக் குறிப்புகள்

Loading...

%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95நீங்கள் ஒரு சரியான சருமப் பாதுகாப்பு முறையை பின்பற்றி ஒரு சரியான மேக்கப் வகையினையும் பின்பற்றினால் இந்த பிரச்சனை எழாது. மேக்கப் போடுபவர்களுக்கு கீழே சொல்லப்பட்ட சருமப் பாதுகாப்புக் குறிப்புகள் மிகவும் சிறந்தவை.

மேக்கப் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்று. ஏனென்றால் நீங்கள் விரும்பும் தோற்றத்தை அதன்மூலம் உங்களால் பெறமுடியும். ஆனால் சிலர் இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமோ என அஞ்சி இந்த மேக்கப் அல்லது உடற்பொலிவை செய்துகொள்ள மிகவும் தயங்குகிறார்கள்.

ஆனால் அவ்வாறு கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் எந்த ஒரு வேதிப் பொருளும் இல்லாமல் இதனை செய்ய பல குறிப்புகள் நம் வசம் இருக்கின்றன.

ஒரு மேக்கப்பை போடுவதற்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய மிகவும் அவசியமான நெறிமுறைகளை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றாமல் மேக்கப் செய்யப்படுவதால் தான் மேக்கப் என்கிற வார்த்தைக்கு அவப்பெயர் உண்டாகியுள்ளது. ஆனால் இந்த குறிப்புகளை நீங்கள் கவனமாக பின்பற்றி வந்தால் நீங்கள் சருமம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

எனவே இந்த குறிப்புகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள மேலே படிப்பதுடன் அவற்றை ஒவ்வொரு முறையும் பின்பற்றவும் செய்யவேண்டும்.


1. முகம் கழுவுதல்:

மேக்கப் போடும் முன் முகத்தை நன்கு கழுவவும். இதன் மூலம் மேக்கப் போடும் போது எண்ணைப் பசையோ அல்லது பொலிவில்லாமலோ இருப்பதை தடுக்க முடியும்.


2. மாயிஸ்சரைஸ் செய்தல்:

நன்கு முகத்தை மாயிஸ்சரைஸ் செய்வது ஒரு மேக்கப்பை இயற்கையாகவும் மேக்கப் போட்ட இடத்தில் விரிசல்கள் ஏற்படாமலும் இருக்கச் செய்யும். எனவே மாயிஸ்சரைசிங் அல்லது சரும ஈரப்படுத்துதல் என்பது உங்கள் மேக்கப் எப்படி இருக்கப் போகின்றது என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.


3. மேக்கப்பை களைதல்:

எப்போதும் உறங்கச் செல்லும் முன் மேக்கப்பை கலைக்க மறக்காதீர்கள். சரும வெடிப்புகள் மற்றும் பல்வேறு சருமப் பிரச்சனைகள் இந்த மேக்கப் சருமத்தின் மேல் வெகு நேரம் இருப்பதனாலேயே அதிலும் குறிப்பாக அதனுடன் உறங்கச் செல்வதாலேயே ஏற்படுகின்றன.


4. சீரம் :

சீரம் எனப்படும் சரும ஊட்டச்சத்து அல்லது முகப் பொலிவு எண்ணை மேக்கப் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இது கூடுதல் ஈரப்பசையை சருமத்திற்குத் தந்து அது உலர்ந்து விடுவதை தடுக்கிறது.


5. நைட் கிரீம்:

ஒரு நைட் கிரீம் சருமத்தை ஒரு நாள் முழுவதுமான மேக்கப் உள்ளிட்ட செயல்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சரி செய்ய உதவுகிறது.


6. டே க்ரீம்:

இந்த பகல் பொழுது க்ரீமை தேர்ந்தெடுக்கையில் அதிகம் எஸ்பிஎஃப் உள்ள ஒன்றாக தேர்ந்தெடுத்து அதற்கு மேல் மேக்கப்பை இட்டால் சூரியக் கதிர்கள் மூலம் பகலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.


7. எக்ஸ்ஃபோலியேஷன் அல்லது இறந்த சரும செல்களை நீக்குதல்:

உங்கள் மேக்கப் நன்கு பொலிவுடன் அமைய முதலில் சருமத்தை இறந்த செல்களை நீக்குவதன் மூலம் சுத்தம் செய்துவிட்டு மேக்கப் செய்தால் நல்ல பலன் பலன் கிடைக்கும்.


8. ஐ கிரீம்:

கண்ணிற்கு கீழே உள்ள பகுதி மிகவும் மென்மையான மற்றும் மெலிதான சருமப் பகுதியாகும். அதனால் தான் அதற்கு அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே மேக்கப் போடும் முன் இந்த ஐ கிரீமை போட்டுவிட்டு பின்னர் மேக்கப் இடுவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply