மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய யூனிமாக் ரோடு ரயில் டிராக்டர் அறிமுகம்

Loading...

%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9கரடுமுரடான சாலைகளுக்கான பயன்பாடு, ஆஃப்ரோடு சாகசம், அதிக பாரத்தை இழுத்துச் செல்வது மற்றும் ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வது என உலக அளவில் பல்வேறு போக்குவரத்து பயன்பாடுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் டிராக்டர்கள் பிரசித்தம். இந்தநிலையில், பெர்லின் கண்காட்சி மையத்தில் நடைபெற்று வரும் இன்னோடிரான்ஸ் என்ற போக்குவரத்து துறை கண்காட்சியில், புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரோடு ரயில் எனப்படும் ரயிலை இழுத்துச் செல்வதற்கான மாடலும் இங்கு வந்திருக்கும் போக்குவரத்து துறை சார்ந்த நிறுவனங்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ரோடு ரயில் ந்த புதிய யூனிமாக் டிராக்டரை ரயில் தண்டவாளங்களிலும், சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் விதத்தில் இரட்டை பயன்பாட்டு அம்சங்களை கொண்டது. ஒரு சில வினாடிகளிலேயே ரயில் தண்டவாளத்திலும், சாதாரண சாலையிலும் பயன்படுத்தும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும். யூரோ-5 தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் டிராக்டர் யூரோ-5 மாசு கட்டுப்பாட்டு அம்சங்களை கொண்டது. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் போக்குவரத்து தேவையை இந்த டிராக்டர் கச்சிதமாக நிறைவு செய்யும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. சர்டிஃபிகேட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய யூனிமாக் டிராக்டர் சுரங்கப் பாதைகளில் ரயிலை இழுத்துச் செல்லும்போது தீப்பிடிக்காத விசேஷ தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதர பயன்பாடுகள் ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்கு மட்டுமின்றி, ரயில் பாதைகளில் மின்சார வடங்களை பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கும், ரயில் பாதை ஆய்வு போன்ற பணிகளுக்கும் இதனை பயன்படுத்த முடியும். சக்திவாய்ந்த எஞ்சின் இந்த யூனிமாக் டிராக்டரில் 231 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 5.1 லிட்டர் டர்போடீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். வல்லமை 1,000 டன் பாரமுடைய ரயில் பெட்டிகளை இந்த யூனிமாக் டிராக்டர் இழுத்துச் செல்லும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பராமரிப்புப் பணிகளுக்கான மாடல் 400 டன் பாரம் வரை இழுவைத் திறன் கொண்டதாக இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply