மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டர் ஸ்பை படங்கள் வெளியாகியது

Loading...

%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9aமெர்சிடிஸ் நிறுவனம் தயாரிக்கும் வரும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டர் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டர் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டர்…
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டர், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் சொகுசு கார் ஆகும். இது சொகுசு கார் ஆவலர்கள் இடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
ஸ்பை படங்கள்; மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி ரோட்ஸ்டரின் சோதனைகள் அவ்வபோது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆக்கிரோஷமான வருங்கால திட்டங்கள்;
ஜெர்மனியை மையமாக கொண்டு இய்னாகும் மெர்சிடிஸ் நிறுவனம், அடுத்த ஆண்டிற்கு சில ஆக்கிரோஷமான வருங்கால திட்டங்கள் கொண்டுள்ளது. சமீபத்தில் கசிந்த ஆவணங்கள் அடிப்படையிலான தகவல்கள் படி, 2017-ஆம் மட்டும் மெர்சிடிஸ் நிறுவனம் 9 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய வேரியன்ட்;
மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிட உள்ள 9 புதிய மாடல்களில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி எனப்படும் இந்த காரும் ஒன்றாகும். இது ஏஎம்ஜி ஜிடி ஸ்போர்ட்ஸ் கார் வகையில் புதிய வேரியன்ட் ஆகும்.
வெளியாக உள்ள விதம்;
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி மாடல், முதலில் ரோட்ஸ்டர் வடிவில் அடுத்த ஆண்டு வெளியாகும். பின்னர், கூபே வடிவிலும் அடுத்த ஆண்டிலேயே வெளியாகும்.
வகைப்படுத்தல்;
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி மாடலானது, ஜிடி எஸ் மற்றும் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஆகிய மாடல்களுக்கும் இடையில் வகைப்படுத்தப்படும்.
டிசைன்;
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி மாடலில், பின் பக்கத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது, மறுவடிவமைக்கப்பட்ட மற்றும் அகலமான பூட் லிட் கொண்டுள்ளது. ரிட்டிராக்டிபில் ஃபோல்டிங் ரூஃப் பொருத்துவதற்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதர மாற்றங்கள்;
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி மாடலின், ரியர் விண்டோ-வின் மேல் பகுதியில் 3-வது பிரேக் லைட், டிரங்க் லிட் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது. 2 டெயில் லைட்களுக்கு இடையில், ஒரு மட்டமான ஸ்லாட் (horizontal slat) உள்ளது. இந்த அமைப்பு, முன்னதாக வேறு எந்த ஏஎம்ஜி வேரியன்ட்டிலும் காணப்படவில்லை.
அறிமுகம்;
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி சி மாடல், 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply