மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Loading...

%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-43-%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%aeமெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி…
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் சொகுசு கார் ஆகும். இது மெர்சிடிஸ் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றாகும்.
அறிமுகம்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜியின் படங்கள் உள்ளிட்ட பிற விஷயங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதன் அலுவல் ரீதியான அறிமுகம், 2016 டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாற்று;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு கார், எஸ்எல்கே -கிளாஸ் ரோட்ஸ்டர் மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.
இஞ்ஜின்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காருக்கு, 3.0-லிட்டர், பை-டர்போ, வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 362 பிஹெச்பியையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காரின் இஞ்ஜின், 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் ரியர் வீல்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.
செயல்திறன்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடுகிறது.
உச்சபட்ச வேகம்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு கார், அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற எலக்ட்ரானிக் முறையில் கட்டுபடுத்தப்பட்ட வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.
டிசைன்;
டிசைன் படி, மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு கார், ஆங்குளார் ஹெட்லேம்ப்கள் உடைய முன் தோற்றம் கொண்டுள்ளது. குரோம் பூச்சு செய்யபட்ட சிங்கிள் ஸ்லாட் கிரில்லின் இரு பக்கத்திலும் ஆங்குளார் ஆங்குளார் ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன கிரில்லின் மையப்பகுதியில் தான், 3-பாயிண்ட்கள் கொண்ட மெர்சிடிஸ்ஸின் நட்சத்திரம் போன்ற லோகோ உள்ளது. இதன் கிரில்லின் அடியில் தான் பம்பர் உள்ளது. இதன் பம்பர், குரோம் பூச்சு செய்யபட்ட நிறைய இன்செர்ட்கள் உடைய பெரிய ஏர் டேம் உள்ளது.
பின் தோற்றம்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காரின் பின் பகுதியில், டெயில்லேம்ப்கள், பூட் லிட் லைனை தொடர்ந்து அமைந்துள்ளது. இதன் டிஃப்யூசரின் இரு பக்கத்திலும் எக்ஸ்ஹாஸ்ட் டிப்கள் உள்ளன.
ஃபோல்டிங் ரூஃப்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு கார், உண்மையில் டாப்லெஸ் மாடல் ஆகும். இதன் ஆட்டோமேட்டிக் மெட்டல் ஃபோல்டிங் ரூஃப், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் திறந்து கொள்ளும் மற்றும் மூடி கொள்ளும் திறன் உடையதாகும். முன்பு போல், லக்கேஜ் கவரை, நமது கையால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இன்டீரியர்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காரின் இன்டீரியரில் புதிய 4-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை இயக்கம் திறன் கொண்டதாகும். மேலும், இது வழக்கமான சொகுசு நிறைந்த லெதர் சீட்கள் கொண்டுள்ளது.
ஸ்போர்ட்டியான அம்சம்;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காரின் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் ரெட் நிறத்திலான காண்ட்ராஸ்ட் தையல் வெளிப்பாடுகள், இதன் ஸ்போர்ட்டியான அம்சத்தை மேலும் கூட்டுகிறது.
விலை;
மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு கார், 77.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply