முழுமையான ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்துகிறது மாருதி

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b9%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95கார் மார்க்கெட்டில் மக்களின் உள்ளம் கவர் கள்வனான வலம் வரும் மாருதி நிறுவனம், எது செய்தாலும் அதில் ஒரு புதுமை இருக்கும் என நம்பலாம். அப்படித்தான் இப்போதும் ஒரு சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அறிவிப்பை வெயிட்டுள்ளது அந்நிறுவனம். அதாவது எலெக்ட்ரிக் மோட்டார்களில் இயக்கப்படும் ஹைபிரிட் கார்களை பரவலாக அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறதாம் மாருதி. சர்வதேச அளவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மாசடைந்த பகுதிகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதற்கு முழு முதற் காரணம் காற்றில் பரவும் மாசுதான். இதைத் தவிர வாகனங்களில் இருந்து வெளியாகும் அளவுக்கு அதிகமான மாசுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு சுவாசப் பிரச்னைகளும், ஆஸ்துமாவும் வருவதற்கான காரணம் என்பதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியும் உள்ளனர். காற்றையும், மனிதர்களையும் களங்கமாக்கி வரும் இத்தகைய மாசுவின் அளவைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஹைபிரிட் கார்களின் உற்பத்திக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில்தான் மாருதி நிறுவனம், தனது முக்கியான மாடல்களை ஹைபிரிட் கார்களாக (எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றல் என இரண்டிலும்ப இயங்கும் ஆற்றல் கொண்டவை) அறிமுகப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாருதியின் வேகன் ஆர், ஆல்ட்டோ, இக்கோ உள்ளிட்ட மாடல்களில் எரிவாயுவில் (எல்பிஜி) இயங்குவதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில் எர்டிகா, சியாஸ் போன்ற மாடல்களில் ஹைபிரிட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முழுமையான ஹைபிரிட் மாடல்கள் இல்லை என்ற குறை இருந்து வருகிறது. அதை நிவர்த்தி செய்யவும், சுற்றுச்சூழல் நலன் காக்கவும் மாருதி நிறுவனம், தனது முன்னணி மாடல்களை பெட்ரோல் மற்றும் மின்சக்தியில் இயங்கும் முழுமையான ஹைபிரிட் கார்களாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கை (2015-16) தாக்கல் செய்யும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது பங்குதாரர்களிடையே பேசிய மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் கெனிச்சி ஆய்கவா, ஹைபிரிட் மாடல் திட்டத்தை அறிவித்தார். இந்தியாவில் முதன்முதலில் ஹைபிரிட் மாடல்களை (சியாஸ், எர்டிகா) அறிமுகப்படுத்தியது மாருதிதான் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். எது, எப்படியோ, சுற்றுச்சூழலை சீர்கெடுக்காத சிறந்த வாகனங்கள் மார்க்கெட்டுக்கு வருமானால், அவற்றை வாடிக்கையாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பார்கள் என நம்பலாம்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply