முகம் பொலிவு பெற முத்தான வழிகள்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9பெண்கள் மட்டுமில்லாது ஆண்களுக்கும் ஏற்படும் பொதுவான கவலை முகம் கறுத்துவிட்டது என்பதுதான்.
வெயில், மாசு போன்றவற்றால் நமது முகம் கருமையடையக்கூடும். எனினும் ஒரு சில முறைகளை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நமது முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
மலைகளில் கிடைக்கும் தேனுடன் பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
இதேபோல் பச்சை உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவிவந்தால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை நிறும் மறையும்.
மேலும் வாழைப்பழத்தை மசித்து பால், தேனுடன் சேர்த்து தினமும் முகத்தில் தடவி வந்தால் கண்டிப்பாக பொலிவு பெறும்.
நாட்டுமருந்து கடைகளில் முல்தானிமட்டி கிடைக்கும். அதனுடன் சந்தனம். பண்ணீர் , எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து உபபோகித்துவந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக மின்னும்.
இதுபோல் முகத்தில் கரும்புள்ளி இருப்பவர்கள் வெள்ளரி, புதினா மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை சாறை சம அளவு கலந்து கரும்புள்ளிகளின் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
உங்கள் சருமம் கடினமாக இருந்தால் கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், பால் ஒரு தேக்கரண்டி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும்.பின்னர் மிதமாக சூட்டில் உள்ள தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால், முகம் எப்போது மென்மையாகவே இருக்கும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply