முகப்பரு தழும்புகளை நீக்க இதைச் செய்யுங்கள்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8dநம் முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களை விட அவை வந்து சென்றதும் ஏற்படும் தழும்புகள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஏதேதோ செய்து முகப்பருக்களைச் சரி செய்தாலும் அவற்றால் ஏற்பட்ட தழும்புகள் பல நாட்களுக்கு நம் முகத்தில் அசிங்கமாகக் காணப்படும். இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க பலரும் கடைகளில் விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்துவர்.

எவ்வித கிரீம்களும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகப்பரு மூலம் ஏற்படும் தழும்புகளைச் சரி செய்ய முடியும்.


தேவையானவை:

க்ரீன் டீ பேக் -2
சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்


செய்யும் முறை:

க்ரீன் டீ பேக்கை சுடு நீரில் சில நிமிடங்கள் போட்டு வைக்கவும். அதன் பின் அதனை வெளியே எடுத்து , அதன் கவரைப் பிரியுங்கள். உள்ளிருக்கும் டீத் தூளை சில நிமிடங்கள் ஆற விடுங்கள்.

அதன் பின் அதனுடன் கடலை மாவு , சர்க்கரை சேர்த்து, தேவைப்பட்டால் , சிறிதளவு நீரைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். கலவை கெட்டிப் பதத்திலேயே இருக்க வேண்டும்.

இனி இந்தக் கலவையினை முகத்தில் போட்டு தேய்க்க வேண்டும். குறிப்பாகப் பருக்கள் உள்ள தழும்பினில் தேய்க்க வேண்டும். அதிகமாய் அழுத்தம் தர வேண்டாம். இதனால் சருமம் சிவந்து எரிச்சல் தரும்.

நன்றாகத் தேய்த்த பின் 20 நிமிடங்கள் காய விட்டு, அதன் பின் கழுவலாம். வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன்கள் தரும். பரு இருந்த இடமே தெரியாமல் போய் விடும். சருமம் மிருதுவாகி, பளபளப்பாக இஎருப்பதை உணர்வீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply