முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிகிறதா இதோ வீட்டிலேயே தயாரிக்கலாம் சூப்பர் ஃபேஸ்பேக்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%afஏசியிலேயே வேலை பார்த்தாலும் வெளியில் அலைந்து திரிந்தாலும் எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்தை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், முகப்பருக்கள் அதிகமாகி, சருமம் பார்ப்பதற்கே சங்கடத்தை ஏற்படுத்துவதாக ஆகிவிடும். அதற்கு என்ன தான் செய்யலாம்?

எண்ணெய் வழிந்துகொண்டிருக்கும் சருமத்தை யாருக்குத் தான் பிடிக்கும்?
ஏசியிலேயே வேலை பார்த்தாலும் வெளியில் அலைந்து திரிந்தாலும் எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்தை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், முகப்பருக்கள் அதிகமாகி, சருமம் பார்ப்பதற்கே சங்கடத்தை ஏற்படுத்துவதாக ஆகிவிடும். அதற்கு என்ன தான் செய்யலாம்?
முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு, நீங்களே அதற்கான ஃபேஸ்பேக்கைத் தயாரித்துக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்

முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
சந்தனப் பவுடர் – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
பால் – 5 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முல்தானி மெட்டியுடன் மஞ்சள், சந்தனப் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பவுடரில் தேவையான அளவு பசும்பாலை ஊற்றி, நன்கு பேஸ்ட்டாக மாற்ற வேண்டும். பேஸ்ட் கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.
இப்போது ஃபேஸ்பேக் ரெடியாகிவிட்டது.

பயன்படுத்தும் முறை

முதலில் காட்டனை ரோஸ்வாட்டரில் நனைத்து முகத்தை நன்கு துடைத்துவிட்டு, பிறகு அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து, நன்கு உலர்ந்ததும் கையில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு, முகத்தில் நன்கு விரல்களால் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தபின் குளிர்ந்த நீரில் நன்கு முகத்தைக் கழுவுங்கள்.
இதை வாரத்துக்கு இரண்டு நாட்கள் செய்தாலே போதும் எண்ணெய் பசை சருமமும் அதனால் வரும் முகப்பருவும் காணாமல் போய்விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply