முகத்தில் அடிக்கடி பருக்கள் வரக் காரணம் இது தான்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8dஒருவரின் அழகைக் கெடுப்பதில் முதலிடம் வகிப்பது முகப்பருக்கள் தான். அதுவும் சிலருக்கு அடிக்கடி முகப்பருக்கள் ஏற்பட்டு முகம் பார்க்கவே அழகாக இருக்காது.

முகப்பருக்களை போக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டிருப்பர். ஆனால் முகத்தில் ஏன் முகப்பருக்கள் வருகின்றது என யாரேனும் யோசித்ததுண்டா?

முகப்பருக்கள் எப்படி வருகின்றது என்பது தெரிந்து கொண்டால் அவற்றை வராமல் தடுக்க முடியும்..


பால்:

பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பால் குடித்தால், பருக்கள் வரும் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் வருமாயின், பால் அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


உணவு வகை:

சரும ஆரோக்கியத்தில் உணவு கட்டுப்பாடு மிக முக்கிய பங்காற்றுகின்றது. சமீப காலங்களில் நீங்கள் சாப்பிடும் உணவில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், அதன் காரணமாகவும் பருக்கள் வரலாம். முக்கியமாகக் கடினமான உணவு கட்டுப்பாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையும் சருமத்தில் பருக்களை உண்டாக்கும்.


காலநிலை மாற்றம்:

காலநிலை மாற்றமும் முகப்பருக்களை வரச் செய்யும். அதிலும் குளிர்ச்சியான காலநிலையில் இருந்துவிட்டு, திடீரென வெப்பம் நிறைந்த பகுதிக்கு சென்றால், அதன் காரணமாகவும் பருக்கள் வரும்.


சரும பராமரிப்பு:

சருமத்திற்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகலாம். ஆனால் அளவுக்கு அதிகமான எண்ணெய்யைத் தடவினால், அதனால் சருமத்தில் பருக்கள் வரக்கூடும்.

அதுமட்டுமின்றி, தவறான மேக்கப் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply