மீன் சாப்பிட்டவுடன் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8dஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடும்.

அதேபோல நாம் சில உணவுகளை வேறு உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது அது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு சாப்பிட வேண்டும்.
* தேன் மற்றும் நெய்யை சம அளவில் கலந்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறிவிடும். எனவே இந்த இரண்டு உணவையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது.
* வாழைப் பழத்தைத் தயிர் மற்றும் மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்ட உடன் தயிர் அல்லது மோரை சாப்பிடக் கூடாது.
* பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், பழத்தில் உள்ள தாதுச்சத்து உணவுடன் கலந்துவிடும். இதனால் பழங்களின் முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடக் கூடாது, ஏனெனில் காய்கறிகளில் இருக்கும் முழுமையான சத்துக்களை நம்மால் பெற முடியாது.
* மீன் மற்றும் கருவாடு போன்ற மீன் வகைகளை சாப்பிட்ட உடன் பால் மற்றும் தயிர் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதனால் வெண் மேகம் போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
* உடல் மெலிந்தவர்கள் புழுங்கல் அரிசியால் செய்த சாதமும், உடல் பருமன் கொண்டவர்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
* ஆஸ்துமா மற்றும் சளித் தொல்லை அதிகமாக உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, மாமிச உணவு, அதிக காரம் கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பின் டீ, காபி வேண்டுமென்றால் குடித்துக் கொள்ளலாம். மேலும் நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* அல்சர் மற்றும் மஞ்சள்காமாலை உள்ளவர்கள், மிளகாய் போன்ற ஊறுகாய் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள், கத்திரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, பீன்ஸ், அதிக காரம் மற்றும் புளிப்பு வகை உணவுகளை சேர்த்துக் கொள்ள கூடாது

Loading...
Rates : 0
Loading...
VTST BN

Leave a Reply