மீண்டும் வருகிறது புதிய லேண்ட்ரோவர் டிஃபெண்டர் மாடல்… டிரேட் மார்க் புதுப்பிக்கப்படுகிறது

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%afலேண்ட் ரோவர் என்ற பெயரைக் கேட்டாலே ஆட்டோ மொபைல் ஆர்வலர்களின் மனதுக்குள் ஒருவிதமான உற்சாகம் உருவாகிவிடும். மிஸன் இம்பாஸிபிள் டாம் க்ரூஸ் போல சாலைகளில் கம்பீரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் கார் லேண்ட்ரோவர். இந்த மாடல் கார்கள் செம காஸ்ட்லி என்பதால், அவற்றை வாங்குவதும், தேரோட்டம் மாதிரி ஊர் பார்க்க ஓட்டிச் செல்வதும் ஒரு விதமான பெருமைக்குரிய விஷயம். லக்ஸரி பிராண்டான லேண்ட் ரோவருக்கு பெரிய அடையாளத்தை உலக அளவில் ஏற்படுத்திக் கொடுத்த மாடல் டிஃபென்டர். எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் இந்த டிஃபெண்டர் மாடல் ஏக பிரசித்தம். அந்த மாடலின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது லேண்ட்ரோவர் பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்தது. இந்தநிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை மாடல் வெகுவிரைவில் மார்க்கெட்டில் தடம் பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பல்வேறு யூகத் தகவல்கள் ஆட்டோ மொபைல் வட்டாரத்தில் காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், தற்போது புதிய விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. டிஃபெண்டர் என்ற பெயரின் டிரேட் மார்க்கை (காப்புரிமை) புதுப்பிக்க விண்ணிப்பித்துள்ளதாம் ஜாகுவார் நிறுவனம். கடந்த மே மாதம் ஐரோப்பாவில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு டிஃபெண்டர் என்ற பெயரை, தன் வசமே தக்க வைத்துக் கொண்டது அந்நிறுவனம். தற்போது, அதற்கு அடுத்த கட்டமாக பிலிப்பைன்ஸில் டிரேட் மார்க்குக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்கையில் வெகு விரைவில் அடுத்த தலைமுறை டிஃபெண்டர் மாடல் வரப்போவது உறுதி என்றே தெரிகிறது. வரும் 2019-ஆம் ஆண்டில் மார்க்கெட்டில் நுழைந்து மாஸ் காட்டப் போகிறது புதிய டிஃபெண்டர் என்கிறார்கள் ஆட்டோ மொபைல் வல்லுநர்கள். இதுகுறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆட்டோகார் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், டிரேட் மார்க்குகளைப் புதுப்பிப்பதும், அதை தக்க வைத்துக் கொள்வதும் வழக்கமான நடவடிக்கைதான் என்றார். அடுத்த தலைமுறை டிஃபெண்டர் மாடல்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். அதேவேளையில், ஏற்கெனவே உள்ள டிஃபெண்டர் மாடல்கள் மீண்டும் மார்க்கெட்டுக்கு வரலாம் என்ற யூகங்கள் பரவியுள்ளன. ஆனால், அந்தக் கருத்தை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அடுத்தது களமிறங்கப் போவது புதிய மாடல் டிஃபெண்டர்தான் என்கின்றனர் வெற்றிப் புன்னகையுடன்… அதுவரை நாமும் காத்திருப்போம்…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply