மின்னலில் மின்சாரம் பெறும் முயற்ச்சி

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81ஒரு மின்னல் வெட்டும்போது ஏராளமான மின்சக்தி வெளிப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, 150 லிட்டர் பெட்ரோலில் இருக்கும் சக்தி, ஒரு மின்னலின் போது மின் சக்தியாக வெளிப்படுகிறது. இந்த மின்சாரத்தை பிடித்து, தேக்கி வைத்து பயன்படுத்துவதைப் பற்றி கடந்த 30 ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் அங்கங்கே நடந்து வருகின்றன.
மின்னல் வெட்டுவது சில மைக்ரோ விநாடிகள் நேரத்தில் மட்டுமே. இந்த குறுகிய காலத்தில் எப்படி அதை பிடிப்பது என்பது, பெரிய விஞ்ஞான கண்ணாமூச்சி விளையாட்டாகவே இருந்து வருகிறது. தவிர, எங்கே மின்னல் தாக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத ஒன்று. எப்போது மின்னல் வெட்டும் என்பதும் அதே போல நிச்சயிக்க முடியாதது.
அப்படியே மின்னலின் மின் சக்தியை பிடிக்க முடியும் என்றாலும், 5 பில்லியன் ஜூல்கள் அளவுக்கு உள்ள மின்சக்தியை தேக்கி வைக்கும் மின்கலன் இன்னும் உருவாக்கப் படவில்லை. இத்தனை நிச்சயமின்மைகளையும் தாண்டி, மின்னல் மின்சாரம் வீணாகப் போகிறதே என்று ஆய்வுகள் தொடர்கின்றன.
மின்னல் மின்சாரத்தை பயன்படுத்த, கொள்கை அளவில் சில முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரிக்க அதைப் பயன்படுத்தலாம் என்கிறது ஒரு முகாம். அந்த ஹைட்ரஜனை சாவகாசமாக எரித்து சக்தியை உருவாக்கலாம்.
மின்னல் சக்தி மூலம் நீரை கொதிக்க வைத்து ஆவியாக்கி அதை சக்தியாக பயன்படுத்தலாம் என்கிறது இன்னொரு கட்சி. சூரிய ஒளி மின் பலகைகள் போல, ஒரு இடி தாங்கி பண்ணையை உருவாக்கி மின்னலை அறுவடை செய்யலாம் என்று சிலர் சொல்கின்றனர்.
அந்த இடிதாங்கி பண்ணைக்கு 1 மைல் தள்ளி மின்னல் விழுந்தால் என்ன செய்வது? மின்னலின் சக்தியை உடனடியாக இயந்திர சக்தியாக மாற்றலாம் என்று கூட சொல்கின்றனர். இப்படி பல, ‘தியரிகள்’ உண்டே தவிர, சூரியனை சமாளித்த விஞ்ஞானம், மின்னலை இன்னும் வெல்லவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply