மின்சார கார்களின் சாதக பாதக விஷயங்கள் வாங்க திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%aaபெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். குறிப்பாக, பல பெருநகரங்களில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் அவசியமாகியிருக்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இன்னமும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த வகை கார்களின் பயன்பாடு வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு திட்டமிடுவோருக்கு ஏதுவாக, சில சாதக, பாதகங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
01.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைவிட மின்சார கார்களுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு, தினசரி 40 கிமீ இயக்க வேண்டிய பெட்ரோல் கார் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும்பட்சத்தில், ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை எரிபொருள் செலவாகும். எலக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 10 யூனிட்டுகள் தேவைப்படும். அதிகபட்சமாக 85 கிமீ வரை செல்லும். இதே 40 கிமீ தூரம் செல்லும் எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட 5 யூனிட் மின்சாரம் செலவாகும். ஒரு யூனிட் 5 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், ஆண்டுக்கு ரூ.9,000 மட்டுமே செலவாகும். எலக்ட்ரிக் கார்களுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும்.
02.
எலக்ட்ரிக் கார்களிலிருந்து புகை வெளியேறாது என்பதால் நகர்ப்புறத்திற்கு மிக ஏற்றதாக இருக்கும். இவை 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத வாகனமாக இருக்கும்.
03.
அலுவலகம், வியாபார விஷயமாக நகர்ப்புறத்தில் சுற்றுவதற்கும், பயன்படுத்துவதற்கும் மிக ஏற்றது. நம் நாட்டில் விற்பனையாகும் மஹிந்திரா இ2ஓ கார் அடக்கமான வடிவமைப்பை கொண்டிருப்பதால், கையாள்வதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.
04.
பெட்ரோல், டீசல் கார்கள் போன்றே எலக்ட்ரிக் கார்களும் சிறப்பான கட்டுமானம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. விபத்துக்களின்போது மின்சாரம் தானாக துண்டிக்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
05.
எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பராமரிப்பு மிக குறைவாக இருக்கும். பெட்ரோல், டீசல் கார்களுக்கான பராமரிப்பு செலவீனம் மிக அதிகம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆன பின்னர் அதிக பராமரிப்பு செலவு வைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், எலக்ட்ரிக் கார்களுக்கான பராமரிப்பு செலவு மிக குறைவாக இருக்கும்.
06.
பெட்ரோல், டீசல் கார்களைவிட அதிர்வுகள் இல்லாத, சப்தம் இல்லாத சுகமான பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதுவே சில வேளைகளில் பாதகமாகவும் இருக்கும். அது ஏன் என்பதை கீழே உள்ள பாதக அம்சங்கள் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.
07.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும். அதாவது, பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைப்பதன் மூலமாக, டாலரில் பணத்தை செலுத்த வேண்டிய அவசியம் குறையும். இதனால், இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தவும் துணைபுரியும். மேலும், பெட்ரோல், டீசலுக்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் போக்கும் மாறுபடும்.
08.
தற்போது மத்திய அரசிடம் ஃபேம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் மற்றும் காருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, எளிதாக சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பல சாதகங்கள் இருந்தாலும், ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. அவற்ரை தொடர்ந்து காணலாம்.
பாதகங்கள்

01.
மின்சார கார்களில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்வதன் மூலமாக குறைந்த தூரமே பயணிக்கக்கூடிய நிலை இருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர்களை தயங்க வைக்கிறது. மேலும், நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இப்போதுள்ள இந்திய மின்சார கார்களில் இல்லை. இடவசதியும் மிக குறைவு.
2.
மின்சார கார்களில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு போதிய மின் ஏற்றும் நிலையங்கள் இல்லை. பெட்ரோல் நிலையங்கள் உள்ளது போன்று, பரவலாக மின் ஏற்றும் நிலையங்கள அமைத்தால், நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
03.
பிக்கப், வேகம் போன்றவை பெட்ரோல், டீசல் கார்களுக்கு நிகராக இருக்காது. இது கார் பிரியர்களை சற்று மனம் கோண செய்யும் விஷயம்.
04.
பேட்டரியில் சார்ஜ் செய்வதற்க மிக நீண்ட நேரம் பிடிப்பதும் பலருக்கு நேரயத்தை விரயமாக்கும் செயலாகிவிடும்.
05.
கார் டயர் போன்றே, இந்த மின்சார கார்களின் பேட்டரியை குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் பயன்படுத்திய பிறகு, மாற்ற வேண்டியிருக்கும். இதன் விலையும் அதிகம். பராமரிப்பு செலவு குறைவாக இருந்தாலும், சில ஆண்டுகளில் இந்த பேட்டரியை மாற்றும் விஷயம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக அமையும்.
06.
மின் தடை, மின் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு இந்த மின்சார கார்கள் ஒத்துவராத விஷயம்.
07.
சப்தம், அதிர்வுகள் குறைவு என்பது பயணிப்பவர்களுக்கு நல்ல விஷயமாக இருந்தாலும், சில சமயம் சாலையில் செல்வோருக்கு கார் வருவது தெரியாமல் விபத்துக்கும் வழி வகுக்கும் வாய்ப்புள்ளது.
08.
மானிய திட்டம் போன்றவை இருந்தாலும், எலக்ட்ரிக் கார்களுக்கான முதலீடு மிக அதிகமாக இருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களை தயங்க செய்கிறது.
09.
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் டிசைன் அவ்வளவாக கவரவில்லை. அதேபோன்று, இடவசதியும் மிக குறைவாக இருப்பதும் பாதகம்தான். வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்களைபோல, ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூர பயணத்தை வழங்கும் கார்களும், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே எலக்ட்ரிக் கார்கள் மீது நம் நம் நாட்டு வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply