மினி பொலேரோ காம்பேக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்க மஹிந்திரா திட்டம்

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%af%87%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8eவாடிக்கையாளர்களுடன் சேர்ந்து, அவர்களுடைய நம்பிக்கையையும் ஒருங்கே பெற்ற மஹிந்திரா நிறுவனம், தற்போது புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மினி பொலேரோவாக அந்த மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே விற்பனையில் ரவுண்டு கட்டி கலக்கிக் கொண்டிருக்கும் மாடலாக விளங்குவது பொலேரோ. 4,107 மி.மீட்டர் நீளம் கொண்ட அந்த வண்டியில், 2.5 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கலால் வரி விதிச் சலுகையை பெற, ஒரு வாகனம் 4,000 மி.மீட்டருக்கு குறைவான நீளம் உடையதாக இருக்க வேண்டும். அதேபோல், டீசல் மாடல்கள் 1.5 லிட்டர் எஞ்சின் திறனுக்கு குறைவாக இருத்தல் அவசியம். இதைத்தவிர, தில்லியில் 2000 சிசி எஞ்சின் திறனுக்கு அதிகமாக உள்ள டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட மஹிந்திரா புதிதாக மினி பொலேரோவைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
4வது காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் ஏற்கெனவே மஹிந்திரா நிறுவனம் சார்பில் கேயூவி 100, டியூவி 300, நூவோ ஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் நான்காவதாக மினி பொலேரோ மார்க்கெட்டுக்கு வரவுள்ளது.
வடிவம்
மத்திய அரசின் கலால் விதிகளுக்கு உட்பட்டு 4 மீட்டருக்கு குறைந்த நீளத்துடன் இந்த கார் வடிவமைக்கப்படவுள்ளது. இதற்காக முற்பகுதி மற்றும் பின்புறமுள்ள ஓவர்ஹேங் பகுதிகளின் நீளத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சின்
எஞ்சினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட டர்போ சார்ஜுடு எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினானது 67 எச்பி (குதிரைத் திறன்) ஆற்றல் கொண்டது. இந்த அளவு தற்போது உள்ள பொலேரோவின் எஞ்சின் திறனைக் காட்டிலும் 5 எச்பி அதிகமாகும்.
வீல் பேஸ்
மற்றபடி வீல் பேஸ் போன்றவை தற்போதுள்ள மஹிந்திரா பொலேரோவைப் போலவே இருக்கும் எனத் தெரிகிறது. நூவோ ஸ்போர்ட், டியூவி 300 ஆகிய மாடல்களில் உள்ளதைப் போல மூன்று வரிசை இருக்கை இதிலும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூட் ஸ்பேஸ்
லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கான பூட்ஸ்பேஸ் வசதி உள்ளிட்டவை இப்போது உள்ள பொலேரோவைப் போலவே இருக்கும் எனலாம். மொத்தத்தில் நீளம் குறைக்கப்பட்டு, எஞ்சின் மாற்றியமைக்கப்பட்ட மினி பொலேரோவாக அது இருக்கப் போகிறது.
விலை
வரிச்சலுகை பெறும் என்பதால், தற்போதுள்ள பொலிரோ மாடலைவிட விலை குறைவாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம். மினி பொலேரோவுக்கு மக்கள் பெரும்பான்மையான வெற்றியைத் தேடித் தரப் போகிறார்களா? இல்லையா? என்பது அந்த மாடல் மார்க்கெட்டுக்கு வந்த பிறகே தெரியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply