மாருதி சூப்பர் கேரி பிக்கப் இந்தியாவில் அறிமுகம் – முழு விவரம்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8dமாருதி நிறுவனம் உருவாக்கும் சூப்பர் கேரி பிக்கப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சூப்பர் கேரி பிக்கப் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
மாருதி சூப்பர் கேரி…
மாருதி சூப்பர் கேரி பிக்கப், மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் எல்சிவி ஆகும். எல்சிவி என்பது இலகுரக வணிக வாகனம் (லைட் கமர்ஷியல் வெஹிகிள் – Light Commercial vehicle (LCV)) என்பதனை குறிக்கிறது. மாருதி சூப்பர் கேரி எல்சிவி, மாருதி சூப்பர் கேரி பிக்கப் டிரக் என்றும் அழைக்கப்படும். இது தான், மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் எல்சிவி ஆகும்.
விற்பனை;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் விற்பனை;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், ஆரம்ப கட்டத்தில், அஹமதாபாத், லூதியானா மற்றும் கொல்கத்தா ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
இஞ்ஜின்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப்பிற்கு, செலெரியோ ஹேட்ச்பேக்கில் காணப்படும் அதே இஞ்ஜின் தான் பொருத்தப்படும். இதன் 793சிசி அளவிலான 2-சிலிண்டர்கள் உடைய இஞ்ஜின், 33.5 பிஹெச்பியையும், 75 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப்பின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், ஒரு லிட்டருக்கு 22.07 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.
உச்சபட்ச வேகம்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.
பிரேக்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், தேவையான நேரத்தில் சரியான முறையில் நிற்பதை உறுதி செய்வதற்காக, இதன் முன் பக்கத்திற்கு மாருதி நிறுவனம் டிஸ்க் பிரேக் பொருத்தியுள்ளது. இதன் பின் பக்கத்திற்கு, எல்எஸ்பிவி (LSPV) பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. எல்எஸ்பிவி (LSPV) என்பது லோட் சென்சிங் பிரபோர்ஷனிங் வால்வ் (Load Sensing Proportioning Valve) பிரேக்கிங் சிஸ்டத்தை குறிக்கிறது. இந்த பிரேக்கிங் முறையில், பிரேக் போடும் போது, கூடுதல் ஸ்திரத்தன்மை கிடைக்கிறது.
பரிமாணங்கள்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப், 3,800 மில்லிமீட்டர் நீளமும், 1,562 மில்லிமீட்டர் அகலமும், 1,868 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. மாருதி சூப்பர் கேரி பிக்கப்பின் வில் பேஸ் 2,110 மில்லிமீட்டர், கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மில்லிமீட்டர் என்ற அளவிலும் உள்ளது.
பே லோட்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப்பின் பே லோட் கெப்பாசிட்டி எனப்படும் சுமை இழுக்கும் திறன் 740 கிலோகிராம் என்ற அளவில் உள்ளது. முக்கிய அம்சங்கள்; மாருதி சூப்பர் கேரி பிக்கப்பில், சார்ஜிங் சாக்கெட், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூவல்மீட்டர், டிஜிட்டல் கிளாக் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஸ்டீரியோ வசதியும் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப்பிற்கு, கால்வனைஸ் செய்யப்பட்ட சேஸி உள்ளது. இது துரு பிடிப்பததிலிருந்து தடுக்கிறது. மேலும், இது ரெயின் கார்ட் கொண்டுள்ளது. கூடுதலாக, வேண்டும்போது திறந்து கொள்ளும் வகையிலான பேக் விண்டோ கொண்டுள்ளது.
போட்டி;
மாருதி சூப்பர் கேர்ரி பிக்கப், இந்திய வாகன சந்தைகளில் டாடா ஏஸ் மற்றும் மஹிந்திரா மேக்ஸிமோ பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
விலை விவரங்கள்;
மாருதி சூப்பர் கேரி பிக்கப் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். லூதியானா – 4.01 லட்சம் ரூபாய் அஹமதாபாத் – 4.03 லட்சம் ரூபாய் கொல்கத்தா – 4.11 லட்சம் ரூபாய்
குறிப்பு;
இந்த அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply