மாருதிக்கு க்விட் மூலம் சவால் விடுக்கும் ரெனோ – முழு விவரம்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d800 சிசி இஞ்ஜினுடன் வெளியாகிய ரெனோ க்விட், வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. இந்நிலையில், ரெனோ நிறுவனம், 1-லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டை அறிமுகம் செய்கிறது. நீண்ட காலமாக, மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு போட்டியாக எந்த மாடலும் இல்லாமல் இருந்தது. ரெனோ க்விட்டின் அறிமுகம், மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு நிச்சயம் பெரிய சவாலாக விளங்குகிறது. 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
மைலேஜ் ஒப்பீடு;
மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஒரு லிட்டருக்கு 23.01 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது. மாருதி ஆல்ட்டோ கே10 மாடல், ஒரு லிட்டருக்கு 24.07 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதே நேரத்தில், ஹூண்டாய் இயான், ஒரு லிட்டருக்கு 20.3 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே அளிக்கிறது. 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் மைலேஜ், மாருதி ஆல்ட்டோ கே10 மாடளை காட்டிலும் குறைவாக சற்று குறைவாக உள்ளது. இருந்தாலும், 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் மைலேஜ், ஹூண்டாய் இயான் மாடலை காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.
இஞ்ஜின்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலுக்கு, 999 சிசி, 3-சிலிண்டர்கள் உடைய எஸ்சிஇ இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 67 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். வரும் காலங்களில், இது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும்.
எக்ஸ்டீரியர்;
எக்ஸ்டீரியர் பொருத்த வரை, 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலும், 800 சிசி இஞ்ஜின் உடைய க்விட் மாடலும், ஒரே மாதிரி தான் உள்ளன. 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் சில்வர் ஓஆர்விஎம்களில், பிளாக் மற்றும் வைட் நிறத்திலான டீகேல்கள் மற்றும் ‘1.0’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும் வேரியன்ட்கள்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்டி (ஓ) வேரியன்ட்களில் கிடைக்கும். 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டில், 7-இஞ்ச் MEDIANAV டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், 800 சிசி இஞ்ஜின் உடைய க்விட்டில் ள்ள அம்சங்கள் ஏற்று கொள்ளபட்டுள்ளது.
பாதுகாப்பு;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டில், பாதுகாப்பு அம்சங்கள் என்ற அடிப்படையில், ஏர்பேக்குகள் தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.
அறிமுகம்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், இந்த மாதத்தில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும்.
போட்டி;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply