மாம்பழ புளிசேரி

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf
தேவையான பொருட்கள்

மாம்பழம் – 2
புளித்த தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
வெல்லம் – எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாம்பழத்தை நறுக்கிப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
தேங்காய்த்துருவலையும் பச்சை மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மாம்பழம் நன்றாக வெந்தவுடன் அதைப் பிழிந்து, தோலை நீக்கிவிட வேண்டும். தோல் நீக்கிய பின் அதில் மஞ்சள் தூள், வெல்லம், உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்க விடவேண்டும்.
அதில் தேங்காய்க் கலவையைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், தயிரைக் கடைந்து அதில் சேர்க்கவும்.
அடுத்ததாக, மிதமான தீயில் வைத்து, மசாலா எல்லாம் ஒன்றாக சேரும்படி இரண்டு நிமிடங்கள் கிளறவும்.
நன்கு கொதித்து வந்ததும், மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யோடு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும். வெந்தயத்தை அப்படியே சேர்க்காமல், வறுத்து பொடி செய்து சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply