மாசுக் கட்டுப்பாடு முறைகேடு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபியட் நிறுவனம்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95சர்வதேச அளவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் (எஃப்சிஏ) லிமிடெட். சர்வதேச அளவில் இந்த நிறுவனம் தயாரித்த கார்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. கூடவே நன்மதிப்பும் சேர்ந்து இருந்தது. இத்தாலி மற்றும் அமெரிக்க கூட்டு நிறுவனமான ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் லிமிடெட், தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கித் தவித்து வருகிறது. அதிக மாசு வெளியேறுவதை வெளியே தெரியாத மறைக்க உதவும் சாதனம், ஃபியட் நிறுவன கார்களில் பொருத்தப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாடு அமைப்புக்கும், இத்தாலி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கும் இதுதொடர்பாக ஜெர்மனி அரசு கடிதம் எழுதியுள்ளது. சட்டவிரோதமாக இந்தக் கருவியை ஃபியட் நிறுவனம், தனது கார்களில் பயன்படுத்தி வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் எஞ்சின் திறன் கொண்ட ஃபியட் 500 எக்ஸ், ஜீப், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சிறியரக எஸ்யூவி மாடல்கள் உள்ளிட்டவற்றில் இந்த சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டை ஃபியட் கிரிஸ்லெர் நிறுவனம் மறுத்துள்ளது. ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட தங்கள் நிறுவனம் செயல்படுவதாக ஃபியட் விளக்களி்த்துள்ளது. ஏற்கெனவே, விற்பனை எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாகவும், பொய்யான கணக்குகளை எழுதி சரிவர செயல்படாத டீலர்களுக்குக் கூட வெகுமதி வழங்கியதாகவும் ஃபியட் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஃபியட் நிறுவன டீலர் ஒருவர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, அமெரிக்க நீதித் துறை, பங்கு – பரிவர்த்தனை வாரியம், அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (எஃப்.பி.ஐ.) ஆகிய அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் வசமாக சிக்கியது ஃபியட் கிரிஸ்லெர் நிறுவனம். கிரிஸ்லெர் நிறுவனம் திவால் கணக்கு காட்டிய கம்பெனிகளில் ஒன்று. இந்நிலையில், ஃபியட்டுடன் இணைந்து கடந்த 75 மாதங்களாக லாபக் கணக்குகளை அளித்ததுதான் விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகனைத் தொடர்ந்து, ஃபியட் நிறுவனமும் எஞ்சின் மாசுக் கட்டுப்பாட்டு சோதனையில் தற்போது சிக்கியுள்ளது. எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் ஃபோக்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பெரும் விமர்சனங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது. இந்த விவகாரங்களில் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கைகள் வெளியானால்தான் இதில் மறைந்துள்ள முறைகேடுகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். அந்த அறிக்கை சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி மார்க்கெட்டில் ஃபியட் நிறுவனத்துக்கு பல சோதனைகள் இனி காத்திருக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply