மராத்திய மொழியில் நம்பர் பிளேட்கள் – மகாராஷ்டிரா அரசு

Loading...

%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8dமகாராஷ்டிரா அரசு, மராத்திய மொழியில் நம்பர் பிளேட்கள் உபயோக்கும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. மாநில போக்குவரத்து துறை அமைச்சரான திவாகர் கோட்டே, பிராந்திய அளவிலான நம்பர் பிளேட்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என நம்புகிறார். எந்த ஒரு வாகனமும் மகாராஷ்டிராவை விட்டு வெளியே செல்லாத வாகனமாக இருந்தால், அவ்வாகனத்தை லோக்கல் லைசன்ஸ் பிளேட்களை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என திவாகர் கோட்டே கூறுகிறார். முன்னதாக, மத்திய போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி, மகாராஷ்டிராவில் உள்ள வாகனங்களின் நம்பர் பிளேட்கள் தேவனகிரி ஃபாண்ட்களில் இருக்கும் படியான திட்டத்தை கொண்டு வர முயற்சித்தார். மத்திய அரசு தலையிட்டு, மகாராஷ்டிராவில் மராத்திய மொழியிலும், ஆங்கிலத்தில் மட்டும் நம்பர் பிளேட்களை உபயோகிக்கலாம் என தெளிவுபடுத்தியது. தற்போதைய நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள வாகனங்களின் நம்பர் பிளேட்கள், ஆங்கில எழுத்துகளிலும், எண்களிலும் உள்ளன. இது தொடர்பான டிபார்ட்மன்ட் அணுகப்பட்டு, இந்த குழப்பங்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. நம்பர் பிளேட்கள் வெறும் மராத்திய மொழியில் மட்டுமெ இருக்க வேண்டும் என திவாகர் கோட்டே விரும்புகிறார். தற்போதைய நிலையில், யாரேனும் மராத்திய மொழியில் நம்பர் பிளேட்கள் கொண்டிருந்தால், அவர்களுக்கு டிராஃபிக் போலீஸ் அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். இத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியில், மகாராஷ்டிராவில் வெறும் மராத்திய மொழியில் உள்ள நம்பர் பிளேட்களின் பிரயோகத்தை மத்தியஅரசு அனுமதிக்குமா என்பது தெளிவாகவில்லை. வாகன உரிமையாளர்கள், உள்ளூர் பிரயோகத்திற்கு ஒரு நம்பர் பிளேட்டையும், வெளிமாநில பிரயோகங்களுக்கு மற்றொரு நம்பர் பிளேட்டை உபயோக்கிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்களா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply