மணக்கும் மதுரை மீன் குழம்பு

Loading...

%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae
தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்
கருவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளிக்கரைசல் – 1 கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 2 (பெரியது)
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
தக்காளி – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி தூள் – 2 ஸ்பூன்


செய்முறை

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள் சேர்த்து வதக்கி, அதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்ததாக, புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க விடவும். புளிக்கரைசல் சுண்டியவுடன் அதில் மீனைச் சேர்த்து ஐந்து நிமிடம் மட்டும் வேகவிடவும்.
மீன் வெந்ததுத் உப்பு, காரம் சரிபார்த்து, மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மணக்கும் மதுரை மீன் குழம்பு தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply