பொலிவான சருமத்திற்கு கிரீன் டீ ஸ்கரப் போதும்

Loading...

%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0சில காலமாக நம்மிடையே அதிகம் பிரபலமான தேநீர் வகையாக கிரீன் டீ இருக்கின்றது. இயற்கையானதாகக் கருதப்படும் கிரீன் டீ நமது உடல் எடை குறைக்க மட்டுமல்ல சருமத்திற்கும் பொலிவையும் தரக் கூடியது என உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய கிரீன் டீ ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இந்த கிரீன் டீ ஸ்க்ரப் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது ஆகும். ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாழாகாது, சரும துவாரங்களில் அடைத்திருக்கும் அழுக்குகளை அகற்ற இதனை உபயோகப்படுத்தலாம்.

அதன் பின்னர் மாய்ஸ்ரைஸர் உபயோகிக்க வேண்டும். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸர் உங்களின் சருமத்திற்கு எவ்வித கெடுதலையும் தராது.


தேவையான பொருட்கள் :

கிரீன் டீ பேக் – 2
தேன் – 1 டீ ஸ்பூன்

முதலில் கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பின் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply