பேபி ஆயில் பயன்தரும் அற்புத பலன்கள்

Loading...

Portrait of young happy woman applying facial cream மற்ற எண்ணெய்களை விட மென்மையானதாக இருக்கும் பேபி ஆயில் விலை மலிவானதே ஆகும். குறைந்த விலையில் கிடைக்கும் இந்த எண்ணெய் நமக்கு அதிக வழிகளில் பயன் தரும் என உங்களுக்குத் தெரியுமா?

பேபி ஆயில் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படும், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் எவை என்பதை விரிவாக இங்குப் பார்ப்போமா?


சவரம்:
பேபி ஆயிலைப் பயன்படுத்தி எரிச்சல் இல்லாமல் சவரம் செய்ய முடியும். இதை ஒரு முறை பயன்படுத்தினால் பின் வேக்ஸ் போன்ற பிற முடி நீக்கும் சிகிச்சைகளை ஒரு பொழுதும் எண்ணிப் பார்க்கவும் மாட்டீர்கள்.


மேக்கப்:
பேபி ஆயிலை மேக்கப் நீக்கப் பயன்படுத்தலாம். மேக்கப் நீக்குவது எவ்வளவு முக்கியம் என அனைவருக்கும் தெரியும். இனி அதிகச் செலவு இல்லாமல் பேபி ஆயிலைப் பயன்படுத்தி மேக்கப்களை நீக்கி விடலாம்.


உடல் எண்ணெய்:
பேபி ஆயிலில் விட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதைக் குளிக்கும் முன் உடலில் தடவி மசாஜ் செய்து கொள்வது உங்களின் தோலை வலுவாக்கும். இதோடு மென்மையான தோலுக்கு உத்திரவாதம் தருகின்றது.


தலைமுடி:
பேபி ஆயிலை உச்சந்த தலையில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடிக்கு பேபி ஆயில் உகந்தது ஆகும்.


ஈரமூட்டி:
நீங்கள் பேபி ஆயிலை ஒரு ஈரமூட்டியாகப் பயன்படுத்தலாம். நீங்கள் இதை மழைக் காலத்தில் பயன்படுத்தி மழையினால் உங்களின் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம். பேபி ஆயிலின் இந்தப் பயன்பாடு வறண்டச் சருமம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply