புளி தோசை

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88பச்சரிசி – 2 கப்,
காய்ந்தமிளகாய் – 7,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நறுக்கிய வெங்காயத்தாள் – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்.


தாளிக்க…

எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். புளி மற்றும் காய்ந்தமிளகாயை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பச்சரிசி, காய்ந்தமிளகாய், புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றை சிறிது நீர் விட்டு நைசாக அரைக்கவும். மாவை ரவா தோசை போல சற்று நீர்க்க கரைக்கவும். பிறகு அதில் வெங்காயத்தாள், கடலைப்பருப்பு, தாளித்த கடுகு ஆகியவற்றை சேர்த்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல் சூடானதும், மாவை ரவா தோசை போல் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, தோசையை மூடி வைத்து சுடவும். ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:
வெங்காயத்தாளுக்கு பதில் 2 பெரிய வெங்காயத்தையும், 2 கைப்பிடி கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து சுடலாம். இந்த தோசைக்கு வெண்ணெய், தேன் அல்லது தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply