புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் இந்தியாவில் செப்டம்பரில் அறிமுகம்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%b9%e0%af%87%e0%ae%9f%e0%af%8dபுதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் பிரியோ ஹேட்ச்பேக்கிற்கு பெரிதும் தேவைப்பட்ட மேம்பாடுகளை வழங்க உள்ளனர். சமீபத்தில் தான், மேம்பாடுகள் செய்யப்பட புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், 2016 இந்தோனேஷிய மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.
முந்தைய மாடல்களை போல், இந்த பிரியோ ஹேட்ச்பேக்கும் மக்களிடம் உரிய வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.


மேம்பாடுகள்;

இந்திய வாகன சந்தைகளுக்கான புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், சிறிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடானில் மேற்கொள்ளப்பட்டது போன்ற டிசைன் அம்சங்களை, புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிலும் எதிர்பார்க்கலாம்.
மேலும், புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிற்கு, பிரிமியம் மற்றும் உயர்தர தோற்றத்தை வழங்குவதற்கு, அமேஸ் காம்பேக்ட் செடானின் டேஷ்போர்ட் ஏற்று கொள்ளப்படும்.


இஞ்ஜின்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிற்கு ஹோண்டா நிறுவனம் புதிய இஞ்ஜினை பொருத்த உள்ளது. புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த இஞ்ஜின், 90 பிஹெச்பியையும், 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.


கியர்பாக்ஸ்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மேலும், இதற்கு தேர்வு முறையிலான சிவிடி கியர்பாக்ஸுடனும் வழங்கப்படலாம்.


விலை;

ஹோண்டா நிறுவனம், இந்த புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கை மேலும் சிக்கனமான மாடலாக அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றனர்.
புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், சுமார் 5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், ஹூண்டாய் கிரான்ட் ஐ10, செவர்லே பீட் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஆகிய மாடல்களுக்கு நிகரான விலையில் விற்கப்படலாம் என்பதால், இந்நிறுவனம் அதிக விற்பனை எதிர்பார்ப்புகிறது.


அறிமுகம்;

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply