புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் விரைவில் அறிமுகம்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b9%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய வாகன சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கும், மக்களால் அதிகம் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இது, 3 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யபட்டது. புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10…
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதற்கு மாற்றங்கள் செய்யவேண்டிய காலகட்டம் நெருங்கி வருவதால், ஹூண்டாய் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் மும்முரமாக தயாராகி வருகிறது. இதன் ஸ்பை படங்கள் கூட ஆங்காங்கே வெளியாகி வருகிறது.

தோற்றம்;
வெளியாகி வரும் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்களில், இதன் முன் பகுதி, பின் பகுதி மற்றும் டோர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவை உருமறைப்பு செய்யபட்டிருந்தது. மேலும், இதன் இன்டீரியரும் உருமறைப்பு செய்யபட்டிருந்தது. இவற்றின் படி பார்த்தால், புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில் கட்டாயம் சில மேம்பாடுகள் செய்யப்படுகிறது என எதிர்பார்க்கலாம்.

இஞ்ஜின்;
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கிற்கு, 1.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் உபயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின்களும், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இனைக்கப்பட்டிருக்கும். விரைவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் சேர்க்கப்படலாம்.

புதிய இணைப்புகள்;
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில், பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படலாம். ஆனால், என்ன என்ன சேர்க்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள பொருத்து தான் பார்க்க வேண்டும்.

போட்டி;
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது ஃபோர்டு ஃபிகோ, ஃபியட் புன்ட்டோ இவோ மற்றும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் விலை, தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கை காட்டிலும், சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply