புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் இந்தியாவில் 2017-ல் அறிமுகம்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9aபுதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான், இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றன. செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தான், இந்த ஆக்டாவியா செடானை தயாரித்து விற்பனை செய்கின்றனர். விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள பொலிவு கூட்டப்பட்ட புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய ஸ்கோடா ஆக்டாவியா…
தற்போதைய ஸ்கோடா ஆக்டாவியா செடான், இந்தியாவில் அறிமுகம் கொஞ்ச காலம் ஆகிவிட்டது. பொலிவு கூட்டப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதால் ஸ்கோடா நிறுவனம் இந்த ஸ்கோடா ஆக்டாவியா செடானிற்கு பொலிவு கூட்டி வழங்க உள்ளனர்.
சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;
சர்வதேச சந்தைகளுக்கு, ஸ்கோடா நிறுவனம், செடான் மற்றும் எஸ்டேட் ஸ்டைல் பாடி கொண்ட ஆக்டாவியா செடான்களை வழங்கும்.
இந்திய சந்தைகளுக்கான மாடல்;
ஆனால், ஸ்கோடா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு செடான் டிசைன் கொண்ட மாடலையே வழங்க உள்ளது.
அறிமுகம்;
சர்வதேச சந்தைகளில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் அடுத்த ஆண்டு மத்தியில் தான் அறிமுகம் செய்யப்படும். இதன் இந்திய அறிமுகம், அதன் பின்னர், 2017 இறுதியில் தான் நிகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம், எஸ்டேட் வடிவிலான ஆக்டாவியா செடானை இந்திய வாகன சந்தைகளுக்கு கொண்டு வராது.
டிசைன்;
டிசைன் பொருத்த வரை, புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான், கோடியாக் எஸ்யூவியை போல் காட்சி அளிக்கும் என கூறலாம். கட்டுமஸ்தான தோற்றம் வழங்கும் வகையில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானின் ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் மருவடிவமைக்கப்படும். 2017 ஸ்கோடா ஆக்டாவியா செடானுக்கு பிரேத்யேகமான் முன் தோற்றம் அளிக்கும் வகையில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானின் ஹெட்லைட்களும் மாற்றி வடிவமைக்கப்படும்.
இஞ்ஜின்;
புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானில் தற்போதுள்ள மாடலின் ஸ்டாண்டர்டான டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்களே பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியர்பாக்ஸ்;
புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானுக்கு தேர்வு முறையிலான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply