புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அமோக வரவேற்பு

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9f%e0%af%86%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%beபிரிமியம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முன்னிலை வகிக்கிறது. அந்த எஸ்யூவிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஃபார்ச்சூனரின் நேரடி போட்டி மாடலான ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி புதிய தலைமுறை அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது. அதனால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் 5,400 முன்பதிவுகளை புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெற்றிருக்கிறது. மேலும், 16,000 பேர் இந்த எஸ்யூவியை வாங்குவது குறித்து விசாரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு எண்ணிக்கை சிறப்பாக இருப்பதால், தற்போது டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்கள் வரை நீடிக்கிறது. முன்பதிவு அதிகமாகும் பட்சத்தில் காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 360என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ட்ரெயிலர் ஸ்வே கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி என தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியிருக்கின்றன. ரியர் ஏசி வென்ட்டும் உள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.25.92 லட்சம் முதல் ரூ.27.61 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.27.52 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply