புதிய அசத்தல் வசதிகளுடன் MOTO M

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8dஆப்பிள், சாம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு நிகராக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் நிறுவனமாக மோட்டோரோலா நிறுவனம் காணப்படுகின்றது.
இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது Moto M எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரை, MediaTek Helio P15 Processor, பிரதான நினைவ 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3050 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.
எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply