புதிய ஃபோர்டு ஜிடி லிமிடெட் எடிசன் கார்… அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்தது எப்படி

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9fசாதாரணமாக ஒரு காரை வாங்கினாலே செம கெத்தாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம்… அதிலும் லிமிடெட் எடிசன் கார் நமக்கு சொந்தமானால் எப்படியிருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கும்… ஆனால், எந்த அடிப்படையில் கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு லிமிடெட் எடிசன் மாடல்களை விற்பனை செய்கின்றன? என்பது பெரும்பாலும் புரியாத புதிராகவே இருக்கிறது. மெர்சிடைஸ், பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் அதுபோன்றதொரு குறைந்த எண்ணிக்கையிலான கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றன. அதில் தகுதி பெறாத வாடிக்கையாளர்களில் சிலர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குகளைத் தொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு செம டென்ஷனை ஏத்திவிடுகின்றன கார் நிறுவனங்கள். அப்படி ஒரு லிமிடெட் எடிசன் மாடல் சூப்பர் காரை ஃபோர்டு நிறுவனம் வடிவமைத்து வருகிறது. ஆனால், எந்த வாடிக்கையாளர்களுக்கு அதை ஒதுக்கீடு செய்துள்ளோம்? என்ற தகவலை அந்நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ஃபோர்டு ஜிடி சூப்பர்கார் தற்போது மார்க்கெட்டில் சக்கைப் போடு போடும் பக்கா ஸ்போர்டிவ்வான மாடல். அதன் மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் காரைத்தான் ஃபோர்டு நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதுவும் லிமிடெட் எடிசன் மாடலாக… மொத்தம் 500 கார்கள் மட்டுமே அந்த மாடலில் வடிவமைக்கப்பட உள்ளன. அதனால் அதற்கு ஏகப்பட்ட டிமாண்ட். இந்த ஜிடி புதிய சூப்பர் காரை வாங்க விண்ணப்பம் போட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,500-க்கும் அதிகமாம். அவற்றில் இருந்து தகுதியான 500 வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்டு நிறுவனம். அவர்கள் எந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் என்பதை அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜ் நாயர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். விண்ணப்பங்களை அனுப்பியவர்களில் 4,000 பேர் ஏற்கெனவே ஜிடி சூப்பர் காரின் பழைய மாடலுக்குச் சொந்தக்காரர்கள் என்று தெரிவித்த ராஜ் நாயர், அதிலிருந்து குறிப்பிட்ட நபர்களுக்கு புதிய ஜிடி மாடல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர்களில் 69 சதவீதத்தினர் ஜிடி மாடல் காரை ஏற்கெனவே வாங்கியவர்களாவர். மொத்தத்தில் தற்போது ஜிடி மாடலை வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு புதிய சூப்பர் காரை ஒதுக்கீடு செய்துள்ளது ஃபோர்டு நிறுவனம். தன் நம்பிக்குக்குரிய வாடிக்கையாளர்களின் தன்னம்பிக்கையை குலைக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை ஃபோர்டு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply