புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஹைப்ரிட் இஞ்ஜினுடன் விரைவில் வெளியாகும்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0அடுத்த தலைமுறை புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹைப்ரிட் இஞ்ஜினுடன் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிறது.
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வழங்கும் சிறந்த முறையில் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளது. ஃபோர்டு நிறுவனம், அடுத்த தலைமுறை புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஹைப்ரிட் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்டை 2020-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன் முதலாக 2012 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் காட்சிபடுத்தப்பட்டது. பின்னர், 2013-ஆம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல், 1.5-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு, இந்த ஆண்டு சிறிய அளவிலான மேம்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா-விடம் இருந்து ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
ஃபோர்டு நிறுவனம், அடுத்த தலைமுறை புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் ஹைப்ரிட் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் அல்லது எலக்ட்ரிக் வேரியன்ட்டை அறிமுகம் செய்யும் நோக்கில் உள்ளது. இது 2020-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் ஹைப்ரிட் இஞ்ஜின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டால், அதற்கு மத்திய அரசின் ஃபேம் ஸ்கீமில் ஆதாயங்களும் கிடைக்கும்.
மேலும், ஃபோர்டு நிறுவனம், தங்களின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் உற்பத்தியை, தங்களின் உலகளாவிய உற்பத்தி மையமான இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply