புக் செய்த ஒரு மாதத்தில் இல்லம் தேடி வரும் ரெனால்ட் க்விட்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8dஅறிமுகமான சில மாதங்களிலேயே பாலிவுட் நடிகை ஆலியா பட் போல மிகப் பிரபலமான மாடல் ரெனால்ட் க்விட். ஏ – செக்மெண்ட் ஹேட்ச்பேக் காரான அது, பார்க்க பக்கா ஸ்போர்ட்டி லுக். அறிமுகமான புதிதில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காத க்விட், அதன் பிறகு படிப்படியாக அசுர வளர்ச்சி எடுத்தது. பதுங்கிக் காத்திருந்த சிறுத்தை சீறிப் பாயும்போது என்ன ஒரு வேகம் வெளிப்படுமோ, அப்படி ஒரு வேகம் க்விட் மாடலின் விற்பனையிலும். அந்த செக்மெண்ட்டில் கிங்காக இருந்த மாருதி ஆல்ட்டோவுக்கு சரியான சவால் கொடுக்கும்படி ஆகிவிட்டது க்விட்டின் வரவு. கடந்த 7 மாதங்களில் மட்டும் 74,000 கார்களை விற்பனை செய்து விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த மாடல். இதில் மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், க்விட்டை புக் செய்தால் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது அந்த காலத்தை ஒரு மாதமாகக் குறைத்துள்ள ரெனால்ட் நிறுவனம். உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டதே இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை ரெனால்ட் நிறுவனம் வெளியிடக் காரணம். ஏற்கெனவே விற்பனையில் பிரம்மாண்டம் காட்டி வரும் ரெனால்ட் நிறுவனம், தற்போது காத்திருப்பு காலத்தையும் குறைத்துவிட்டதால், அதன் புக்கிங் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ..உங்களுக்காக அந்த அந்த மாடல் குறித்த மீள் பார்வை… க்விட் மாடலின் டிசைன், ரெனால்ட் டஸ்டரைப் போல உள்ளது. எஸ்யூவி ரக வடிவமைப்புடன் அந்த மாடல் இருப்பதால், அதற்கென தனி ஆடியன்ஸ் உருவாகியிருக்கிறார்கள். 799 சிசி எஞ்சின் அதில் பொருத்தப்பட்டுள்ளது. அது 53 பிஎச்பி மற்றும் 72 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி, க்விட்டில் 180 மில்லி மீட்டராக உள்ளது இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், சைல்ட் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை உள்ளன. விலை ரூ.2.87 லட்சம், மைலேஜ் லிட்டருக்கு 25.17 கி.மீ. ஏ-செக்மெண்ட் மார்க்கெட்டில் புதிய வரலாறைப் படைக்க வலை வரித்துள்ளது ரெனால்ட் க்விட்… விரைவில் அதன் விருப்பம் ஈடேற வாயப்புள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply