பீட்ரூட் கடலைப்பருப்பு கறி

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95பெரிய பீட்ரூட் – 1 (150 கிராம்),
கடலைப் பருப்பு – 100 கிராம்,
பொடியாக அரிந்த (வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 1),
இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தக்காளி சிறியது – 1,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
புதினா தூள் – 1/4 டீஸ்பூன் அல்லது ஃப்ரெஷ் புதினா இலை – சிறிது,
கொத்தமல்லி – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து குக்கரில் பதமாக, ரொம்ப குழையாமல் வேக வைக்கவும். பீட்ரூட்டை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகைகள் (மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், புதினா தூள்) சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விட்டு தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு தயிர் சேர்த்து வதக்கி, வெந்த பீட்ரூட், கடலைப்பருப்பை சேர்த்து கிளறி, பச்சைமிளகாயை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கரம்மசாலா, கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பாகிஸ்தானி ஸ்டைல் பீட்ரூட் கடலைப்பருப்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply