பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் மாடலின் படங்கள் வெளியீடு

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%af%e0%af%82-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d5-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரிக்கும் பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் மாடலின் படங்கள் வெளியிடபட்டுள்ளது. பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் பற்றிய கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன்…

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும். அடுத்த தலைமுறை கார், 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, நிகழ் தலைமுறை 5 சீரிஸ் ரகத்தில், எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் தான் எம்5 வரிசையில் கடைசி காராக இருக்கும்.
லிமிடெட் எடிஷன்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், லிமிடெட் எடிஷன் மாடலாக தயாரிக்கப்படுகிறது. பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் மாடலில் ஒட்டுமொத்தமாக 200 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இதில், 100 பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் வெள்ளை நிறத்திலும், 100 பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் கருப்பு நிறத்திலும் தயாரிக்கப்படும்.
இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், 4.4-லிட்டர், ட்வின்-டர்போ, வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 552 பிஹெச்பி என்ற நிலையில் இருந்து 592 பிஹெச்பி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மேலும், இதன் டார்க், 681 என்எம் டார்க்கில் இருந்து 19 என்எம் கூட்டப்பட்டு 700 என்எம் டார்க் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன் மாடலின் இஞ்ஜினின் பவர் மற்றும் டார்க், ரியர் வீல்களுக்கு 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் மூலம் கடத்தப்படுகிறது.
செயல்திறன்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டிவிடுகிறது.
உச்சபட்ச வேகம்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.
சிறப்பு அம்சங்கள்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், கொஞ்ச கார்பன்-ஃபைபர் எம் காம்பெட்டிஷன் பேக்கேஜ் பெறுகிறது. இந்த எம் காம்பெட்டிஷன் பேக்கேஜ்ஜில், பூட் லிட்-டில் உள்ள ஸ்பாய்லர், ரியர் டிஃப்யூசர் மற்றும் மிரர் கேப்கள் உள்ளன. மேலும், கிளாஸ்ஸி பிளாக் கிரில் மற்றும் ஜெட் பிளாக் அல்லாய் வீல்களும் இந்த பேக்கேஜ்ஜில் கிடைக்கிறது.
இன்டீரியர்;

பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், ஓபல் வைட் காண்டிராஸ்ட் தையல் வேலைப்பாடு கொண்ட முழுமையான பிளாக் மெரினோ லெதர் இன்டீரியர் கொண்டுள்ளது. ஒவ்வொரு காரும், ஸ்பெஷலான “1/200” என்ற முத்திரை (special “1/200” engraving) உடனான எம் பெர்ஃபார்மன்ஸ் (M Performance) கொண்டிருக்கும். இந்த ஏற்பாடு, இந்த கார் கொண்டுள்ள உரிமையாளர்களுக்கும், பிறருக்கும் இந்த கார் எவ்வளவு ஸ்பெஷல் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அறிமுகம்;

புதிய 7-ஆம் தலைமுறை பிஎம்டபுள்யூ 5 (ஜி30), அடுத்த ஆண்டு நடைபெறும் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விலை; பிஎம்டபுள்யூ எம்5 காம்பெட்டிஷன் எடிஷன், €129,500 (இந்திய மதிப்பில் 95.75 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கப்படும். இது, வழக்கமான எம்5 மாடலை காட்டிலும் €25,200 (இந்திய மதிப்பில் 18.63 லட்சம் ரூபாய்) விளை உடையதாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply