பிஎம்டபிள்யூ பற்றிய 10 அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%af%e0%af%82-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-10-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bfபிஎம்டபிள்யூ…. பல பேரின் கனவு கார்… பெரும்பாலானோரின் வாழ்நாள் லட்சியம்… அந்தக் கார் வீதியில் வந்தால் திருவாரூர் தேர் பவனி வருவதைப் போல, பார்ப்பவர் கண்கள் வியப்பில் பூக்கும்… சும்மாவா… செம கிளாஸான லுக்கும், ரிச்சான பெயரும் ஒரு சேரக் கொண்ட கார் அல்லவா அது… அப்படிப்பட்ட பேரும், புகழும் பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தைப் பற்றி சுவாரஸ்யானமான தகவல்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதைப் பூர்த்தி செய்யும் வகையில், 10 புதிய மற்றும் அரிய தகவல்களை உங்களுக்குத் தரவிருக்கிறோம்… வாருங்கள் அதையும் ரசிக்கலாம்…
1) பிஎம்டபிள்யூ விரிவாக்கம்;
உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயரான பிஎம்டபிள்யூ-வின் விரிவாக்கம் உங்களுக்குத் தெரியுமா?. பவேரியன் மோட்டார் வொர்க்ஸ் என்பதுதான் அது. இந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள முனிச் என்ற நகரத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த இந்நிறுவனம், மினி கார் லிமிடெட்டின் தாய் நிறுவனமும் கூட. ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியின் பங்குதாரராகவும் இருக்கிறது பிஎம்டபிள்யூ.
2) பிஎம்டபிள்யூ லோகோ
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோ பிரசித்தி பெற்றது. வட்ட வடிவில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணத்தில் இருக்கும் அந்த லோகோ டிசைனுக்கு மயஙகிவர்கள் ஏராளம். வட்ட வடிவமானது சுழலும் விசை சக்கரத்தைக் குறிப்பதாக நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. ராப் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தோன்றியதுதான் பிஎம்டபிள்யூ. அந்த ராப் மோட்டார்ஸின் சின்னம் வட்ட வடிவில் இருக்கும். அதன் அடிப்படையிலேயே அந்த லோகோவை பிஎம்டபிள்யூ பயன்படுத்துகிறது. ஜெர்மனியின் பெவேரியா மாகாணத்தின் கொடியின் நிறமான நீலம் மற்றும் வெண்மை பிஎம்டபிள்யூ லோகோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் முன்னால் உள்ள சுழலும் சக்கரத்தைக் குறிப்பதாகவே பிஎம்டபிள்யூவின் இலச்சினை அறியப்பட்டது. இது 1929-ஆம் ஆண்டில், ஒரு விளம்பரத்தில் காணப்பட்ட விமானத்தின் புரோபெள்ளரில் இருந்து ஏற்கபட்டதாக கருத்து நிலவி வந்தது. கடந்த 2010-ஆம் ஆண்டில் இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ப்ளச்சின்ஸ்கை, பிஎம்டபிள்யூவின் லோகோவுக்கும், விமானச் சக்கரத்துக்கும் எந்தத் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.
3) கிட்னி கிரில்;
பிஎம்டபிள்யூ கார்களுக்கு ரிச்சான லுக்கைத் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பவை, முகப்பில் பொருத்தப்பட்டுள்ள கிரில்கள். மற்ற நிறுவன கார்களில் இருந்து வித்தியாசப்பட்டு காணப்படுவதும் இதுதான். கிட்னி வடிவ கிரில்கள் செம கிளாஸியாக பிஎம்டபிள்யூ கார்களில் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்தாலே கொள்ளை அழகு. இந்த வகையான நேர்த்தியான டிசைன்கள் பிஎம்டபிள்யூ 303 மாடல் காரில்தான் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டன. அந்நிறுவன கார்களில் 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்த முதல் மாடலும் அதுதான்.
4) பிஎம்டபிள்யூ-வின் தலைமையகம்;
ஜெர்மனியின் முனிச் பகுதியில் பிஎம்டபிள்யூ-வின் தலைமையகம் செயல்படுகிறது. அந்நிறுவனக் கார்களைப் போலவே அந்தக் கட்டடமும் தனிச் சிறப்பு வாய்ந்தது. 4 சிலிண்டர் எஞ்சின் போன்ற தோற்றத்தில் அந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருக்கும். வித்தியாசமான பில்டிங் டிசைன், பார்ப்பவர்களை ஒரு கணத்தில் ஈர்த்து விடும்.
5) பிஎம்டபிள்யூ-வின் எம் டிவிஷன்;
பிஎம்டபிள்யூ-வின் எம் சீரிஸ் வாகனங்களைத் தயாரிக்கும் எம் டிவிசன், 1960-களில் தொடங்கப்பட்டது. 1960 மற்றும் 1970-களில் ரேசிங்கிற்கு உதவிகரமாக இருக்க தொடங்கபட்ட இந்த எம் டிவிஷன், பின்னர் உயர்ந்த விவரக்குறிப்புகள் கொண்ட எம்3 போன்ற மாடல்களை தயாரிக்க துவங்கியது. 1978 முதல் 1981 வரையிலான காலகட்டத்தில், எம்1 தான், பிஎம்டபிள்யூ-வின் எம் டிவிஷன் தயாரித்த முதல் கார் ஆகும். இந்த திட்டத்தை முதலில் லம்போர்கினி நிறுவனம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், நிதி சிக்கல் காரணமாக இந்த திட்டத்தை இந்நிறுவனம் மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. மேலும், எம் டிவிஷன் தான், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் போன்ற மோட்டர்சைக்கில்களை தயாரிக்கும் ஒரே பெர்ஃபார்மன்ஸ் நிறுவனம் ஆகும்.
6) பிஎம்டபிள்யூ மோட்டோராட்;
காரை அடுத்து மோட்டார் சைக்கிள்களிலும் மாஸ் காட்டிக் கொண்டிருப்பது பிஎம்டபிள்யூ நிறுவனம் தான். 1923-ஆம் ஆண்டிலேயே மோட்டார் சைக்கிள் உற்பத்தியை பிஎம்டபிள்யூ தொடங்கிவிட்டது. 1930-களில் உலகின் அதிவேக பைக்கை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். மணிக்கு 278 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் சூப்பர் பைக்கை அப்போதே அறிமுகப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். தற்போது, பிஎம்டபிள்யூ மோட்டோராட், தங்களின் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் போன்ற மோட்டார்சைக்கிள் கொண்டு வேர்ல்ட் சூப்பர்பைக் சேம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது.
7) இசெட்டா;
விசித்திரமான சிறிய ரக காரை இசெட்டா என்ற பெயரில் கடந்த 1950-களில் அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ நிறுவனம். குமிழி கார் (பப்பிள் கார்) என அனைவராலும் அறியப்பட்டது இந்த மாடல். 3 லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் சூப்பர் மைலேஜ் காரான இது, அந்தக் காலகட்டத்தில் விற்பனையில் மாஸ் காட்டியது. உலகம் முழுவதும் 1,61,728 இசெட்டா கார்கள் விற்பனையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
8) பிஎம்டபிள்யூ-வை கையகப்படுத்திய மெர்சிடிஸ்;
கடந்த 1959-ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் திவாலாகும் நிலையை நோக்கிச் சென்றது. அப்போது மெர்சிடைஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ-வை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஒருவழியாக பெவேரியாவில் இருந்த உள்ளூர் முதலீட்டாளர்களின் ஆதரவுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் மீண்டு வந்தது. ஒருவேளை திவாலாகியிருந்தால் மெர்சிடைஸ் பிஎம்டபிள்யூ என்ற புது நிறுவனம் உதயமாகியிருக்கும்.
9) எஃப் 1 – டிரைவர் சேம்பியன்ஷிப் வென்ற பிஎம்டபிள்யூ;
எஃப் 1 – டிரைவர் சாம்பியன்சிப் ரேஸ் போட்டியில் கடந்த 1983-ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் வெற்றி பெற்றது. மிக பழமையான தொழில்நுட்பம் கொண்ட பழமையான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்ட கார்தான் வெற்றியை தேடித்தந்தது. எம்- 10 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த 4 சிலிண்டர் கொண்ட எஞ்சினான அடிப்படையில் 75 குதிரைத் திறன் ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், அதனை 1,400 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்களை செய்து பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10) பாப் மார்லி-க்கும் பிஎம்டபிள்யூ-வுக்கும் உள்ள பிணைப்பு;
ஜமைக்காவில் பிறந்து உலகப் புகழ் பெற்ற ராக் இசைக் கலைஞர் பாப் மெர்லிக்கும், பிஎம்டபிள்யூ-வுக்கும் சில தொடர்புகள் உள்ளன. மெர்லி, தனது வாழ்வில் பெரும்பாலான தருணங்களில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அது என்ன தெரியுமா? பிஎம்டபிள்யூ என்பது பாப் மெர்லி மற்றும் வெய்லர்ஸ் (இசைக் குழுவின் பெயர்) ஆகியவற்றின் முதல் எழுத்தைக் குறிக்கும் என்பதால் அந்தக் காரை வைத்துள்ளேன். மற்றபடி சொகுசு கார் எனக்கு வேண்டும் என்பதற்காக பிஎம்டபிள்யூவை வைத்திருக்கவில்லை என்று மார்லி நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த 10 தகவல்களும் உங்களுக்கு புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து பயணியுங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply