பாண் முட்டை உப்புமா

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%be
தேவையான பொருட்கள் :

பாண் – 3 துண்டுகள்
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு
உளுத்தம்பருப்பு
சீரகம்
ப.மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும், பின்னர் முட்டையில் இருந்து வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். பாண் துண்டுகளை சிறிய கட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடாகியதும் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வரும் போது நறுக்கியுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் முட்டையை(வெள்ளை கருவை மட்டும்) ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
முட்டை உதிரியாக வந்ததும் வெட்டி வைத்துள்ள பாண் துண்டுகளை போட்டு தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் கிளறவும். சுவையான சத்தான பாண் முட்டை உப்புமா ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply