பட்டாணி பனீர் புலாவ்

Loading...

%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%8dபாஸ்மதி அரிசி 1/2 கப், பனீர் துண்டுகள் 3/4 கப், பச்சை பட்டாணி 1/4 கப், வெங்காயம் 1, தக்காளி 1/2, இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, சீராக தூள் 1/2 டீஸ்பூன், தனியா தூள் 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புதினா இலை சிறிது, கசூரி மேத்தி 2 சிட்டிகை, வெண்ணெய் 3 டீஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 3 துளிகள்.எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் 3/4 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பனீர் துண்டுகளை ஒரு நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து போட்டு, பொன்னிறமாக வதக்கவும். வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். இப்படி செய்வதால் பனீர் மிருதுவாக இருக்கும். குக்கர் அல்லது ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
பச்சை மிளகாயை கீறி போடவும். தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். பின்னர், சீரக தூள், கரம் மசாலா, தனியா தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்க்கவும். உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்த அரிசி கலவையை சேர்க்கவும். பனீர் துண்டுகளை தண்ணீரை நீக்கி சேர்க்கவும். குக்கரில் போட்டு 1 விசில் விட்டு, 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும். சுவையான பட்டாணி பனீர் புலாவ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply