நெட்டில் இயங்கும் ஸ்மார்ட் கார்…. புருவம் உயர்த்த வைத்த அலிபாபா நிறுவனம்

Loading...

%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8dஅணுவைப் பிளந்து ஆழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஔவையார் பாடினார். இன்றைக்கு நிஜமாகவே அணுவுக்குள்ளே பல அற்புதங்களைப் புகுத்தும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து கம்ப்யூட்டரைத் தட்டினால், ஒபாமாவுடன் கூட பேச முடிகிற நிலைக்கு வந்து விட்டோம். அதேபோல, கம்ப்யூட்டர் வாயிலாக காரை ஓட்டும் தொழில்நுட்பமும் வந்தால் அதுவும் பரவலான ஆதரவைப் பெறும் என்பதில் ஆச்சரியம் இல்லை. சீனாவில் இணைய வர்த்தகத் துறையில் தெறி காட்டிக் கொண்டிருக்கும் அலிபாபா நிறுவனம், அப்படியொரு காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கம்ப்யூட்டர் ஆபரேடிங் சிஸ்டம் (ஓஎஸ்) அடிப்படையில் இயங்கக்கூடிய காரான அதை ஆர்எக்ஸ் 5 என்ற பெயரில் சந்தைப்படுத்தியுள்ளது அலிபாபா நிறுவனம். சாதாரண கார்களைப் போல அல்லாமல் முழுக்க, முழுக்க இணையவழியே இணைக்கப்பட்ட காராக இது வலம் வருகிறது. விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, ஜெனிக்ஸ், என்.டி. உள்ளிட்ட ஓஎஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி நமது கணினியை செயல்பட வைப்பதைப் போன்ற டெக்னாலஜிதான் இதுவும். சீனாவில் பிரபலமான யன் ஓஎஸ் சிஸ்டம் வாயிலாக ஆர்எக்ஸ் 5 கார்கள் இணைக்கப்பட்டிருக்கும். ஜிபிஎஸ், வை – ஃபை உள்ளிட்ட வசதிகள் இல்லாமலேயே வழித்தடங்களைக் கண்டறியக் கூடிய அம்சம் இந்தக் காரில் உள்ளது. கம்ப்யூட்டரில் நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் மற்றும் அப்ளிகேஷன்கள் உள்ளிட்ட வசதிகளை மாற்றிக் கொள்வோம். அதுபோலவே, ஆர்எக்ஸ் 5 காரிலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மென்பொருள்களை வடிமைத்து தேவையான வசதிகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை ஆங்கிலத்தில் டெய்லர் மேட் வசதி எனக் குறிப்பிடுவார்கள். கார் செல்லும் வேகத்துக்கு ஏற்ப வழிகாட்டி மேப்பின் அளவு சிறிது, பெரிதாக மாறும் வசதியும் இந்த மாடல் காரில் உள்ளது. காருக்குள் இருந்தபடியே வாய்ஸ் கண்ட்ரோல் எனப்படும் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து பாடல்களை இசைக்கச் செய்யலாம். ஏ.சியை ஆன் செய்யலாம். இண்டிகேட்டர் விளக்குகளை எரிய வைக்கலாம். இப்படி ஏராளமான வேலைகளைச் செய்ய முடியும். குறைந்த எரிபொருள் செலவு, பவர் ஃபுல் ஆக்சிலேட்டர், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்தக் காரில் இருப்பதாக அலிபாபா நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்திய மதிப்பில் இந்தக் காரின் விலை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.19 லட்சம் வரையாக உள்ளது. ஆர்எக்ஸ் 5 மாடல் காரின் 4 புறமும் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் 360 டிகிரி முழுவதும் விடியோ காட்சிகளையோ, புகைப்படங்களையோ நம்மால் பதிவு செய்ய முடியும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்திலான கார்களின் வருகை பார்ப்போர் புருவத்தை உயர்த்தினாலும், சிறந்த செயல்பாட்டில்தான் இருக்கிறது அவற்றின் உண்மையான வெற்றி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply